மனைவியின் புது டெக்னிக்கால், மனைவியே தனது கணவனை வாடகைக்கு விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஒட்டு மொத்த பொருளாதாரே அப்படியே, அடியோடு மாறியிருக்கிறது.

குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, தமிழகம் உட்பட ஒட்டு மொத்த உலகத்திலும் விலைவாசி உயர்ந்தது. அத்துடன், இந்த விலை வாசி உயர்வானது தொடர்ந்து ஏறிக்கொண்டே வருகிறது. இனதால், மாத சம்பளத்தை நம்பியிருக்கும் குடும்பத்தினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றனர்.

இதன் காரணமாக, பலரும் புதிய புதிய வழிகளில் பணம் சம்பாதிக்க தொடர்ச்சியாக யோசித்துக்கொண்டே வருகின்றனர்.

இப்படியாக, சற்று வித்தியாசமாக யோசித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தனது “கணவனை வாடகைக்கு விடுவதாக” தற்போது அறிவித்து உள்ளார்.

அதாவது, இங்கிலாந்து நாட்டில் மாதம் சம்பளம் வாங்கும் குடும்பத்தைச் சேர்ந்த லாரா யங் என்ற பெண் தான், தனது கணவனை வாடகைக்கு விடுவதாக தற்போது அறிவித்து இருக்கிறார்.

சரியாக சொல்வதென்றால், லாரா யங் என்ற பெண் பாட்கேஸ்ட் கேட்டுக்கொண்டு இருக்கும் போது, அந்தப் பாட்காஸ்ட் ஆடியோவில் ஒரு பெண், “தான் புதிதாக ஒரு வீட்டுக்குச் சென்ற போது, பக்கத்துவீட்டுக்காரர் தன்னுடைய பர்னிச்சர்களை எடுத்து வைத்து, அதனை செட் செய்ய பெயரி அளவில் உதவினார்” என்று, கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த பெண், அதையே தனது ஐடியாவாக மாற்ற முயன்றிருக்கிறார்.

அதன்படி, இங்கிலாந்து நாட்டில் விலை உயர்வை சமாளிக்கும் வகையிலும், எதிர்பாரத குடும்ப செலவுகளைச் சமாளிக்கக் கூடுதலாக பணத்தைச் சம்பாதிக்கும் முயற்சியில் அந்த பெண் லாரா யங், “எல்லாவிதமான வேலைகளையும் தெரிந்த தனது மல்டி டேலென்ட் கணவனை மற்ற பெண்கள் அல்லது வீட்டில் செய்ய வேண்டிய வேலைக்கு உதவி செய்யத் தயார் என்று குறிப்பிட்டு, Hire my handy hubby என்று, விளம்பரம் செய்யும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

லாரா யங், “எனது கணவர் ஜேம்ஸ் -க்கு, தெரியாத வேலையே இங்கு இல்லை” என்றும், அந்த பெண் தனது கணவனின் அருமை பெருமைகள் பற்றி கூறி உள்ளார்.

மேலும், லாரா யங்கின் கணவன் ஜேம்ஸ், “இங்கிலாந்து நாட்டில் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் அவர்களது வீட்டில் கூடுதல் அடிப்படை பணிகளான பெட், கிட்சன், டைனிங் டேபிள் ஆகியவற்றை அடிப்படையிலான பணிகளில் கை தேர்ந்தவர் என்றும், இவருக்கு கூடுதலா பெயின்டிங், டெக்கரேட்டிங், டைல்ஸ் பதிப்பது மற்றும் கார்பெட் அமைப்பது உள்ளிட்ட வீட்டில் செய்ய வேண்டிய பெரும்பாலான பணிகள் இவருக்கு நன்றாகவே தெரியும்” என்றும், அவரது மனைவி கூறி உள்ளார்.

இதன் காரணமாகவே, ஜேம்ஸின் மனைவி லாரா யங் “Rent My Handy Husband” என்கிற பெயரில், ஒரு இணையதளம் மற்றும் ஃபேஸ்புக், நெக்ஸ்ட்டோர் போன்ற செயலிகளில் தனது கணவன் குறித்து புதுமையான வகையில் விளம்பரம் செய்து உள்ளார். இதனால், அந்த மனைவி தனது கணவன் குறித்து வெளியிட்ட இந்த விளம்பரம், தற்போது உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.

இதனிடையே, ,ஜேம்ஸின் - லாரா யங் தம்பதிக்கு மொத்தம் 3 குழந்தைகள் உள்ளதால், குடும்ப செலவுகள் அதிகரிப்பதாகவும், அந்த செலவை குறைக்கும் விதமாகவே, “கணவனை வாடகைக்கு விட தயார்” என்று, அவரது மனைவி புதுமையான முறையில் விளம்பரம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.