உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட தலைநகரங்களில் இந்தியாவின் தலைநகரம் முதல் இடம் பிடித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கால நிலை மற்றாத்தால் சுற்றுச் சூழல் தொடர்ந்து மாறுபட்ட வகையில் காணப்படுகிறது. இதனால், அதிக அளவிலான வறட்சி, அதிக அளவிலான குளிர்ச்சி மற்றும் வெப்ப நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, உலக சுகாதார அமைப்பானது கடந்த ஆண்டு, காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பு அளவை மாற்றி அமைத்தது.
அந்த வகையில், புதிய தர நிலைகளின் படி, “பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கன சதுரத்திற்கு 5 மைக்ரோ கிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்” என்ற அளவீடு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பான WHO, “காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது எந்த ஒரு நாட்டிலும் பதிவாகவில்லை என்றும், இது தொடர்பாக உலகம் முழுவதும் சுமார் 6,475 நகரங்களில் காற்று மாசு தரவுகளின் கணக்கெடுப்பை சுவிஸ் மாசு தொழில் நுட்ப நிறுவனம் நடத்தியது” என்றும், குறிபிட்டது.
அதன்படி, உலக சுகாதார அமைப்பான WHO, “காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 93 நகரங்களில், 10 மடங்கு அதிக அளவிலான காற்று மாசுபாடு பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளதாக” கூறி உள்ளது.
அவை மட்டுமின்றி, “கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டு மொத்த மாசு அளவு மேலும் மோசமடைந்தது உள்ளது என்றும், உலகின் மிகவும் காற்று மாசுபட்ட தலைநகரமாக இந்தியாவின் தலைநகரான டெல்லி இருக்கிறது” என்கிற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டு உள்ளது.
அதே போல், உலகின் அதிக காற்று மாசுபாட்டை உடைய நாடாக வங்க தேசம் உள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பான WHO கூறியுள்ளது.
அதே போல், கடந்த ஆண்டு ஜீலை மாதம் “சென்னையில் காற்று மாசானது, அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு உயர்ந்து உள்ளதாக” அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி இரவு நேரத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் காற்றின் மாசுபாடு அதிகரித்த நிலையில், சென்னையில் காற்றின் மாசு மிக அதிக அளவில் அதிகரித்துள்ளதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அப்போது தெரிவித்திருந்தது.
அதே போல், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், மாசு கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு ஆணையமானது, ஒரு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில், “டெல்லி, ஹரியானா, உ.பி., மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் அண்டை நகரங்களான நொய்டா, கிரேட்டர் நொய்டா. காசியாபாத், பரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய, அவசரகால தேவைகளை தவிர, டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்” என்றும், கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.