“சீனாவின் உகான் மார்க்கெட்டில் இருந்து தான் கொரோனா பரவியது” என்று, ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் மீண்டும் கண்டுபிடித்து அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று நோய், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் பரவத் தொடங்கியதாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த கொரோனா என்னும் கொடிய வைரஸ், முதல் அலையை கடந்து, 2 வது அலையும் வந்து, 3 வது அலையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தீவிரமாக பரவிய நிலையில், தற்போது தான் மெல்ல இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.
ஆனால், இந்தியாவைத் தவிர்த்து, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் கொரோனா 4 வது அலையே வந்துவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அலையாக பரவி பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
அதன் பிறகு, கடந்த 2021 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் 2 வது அலையாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றது.
அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், அதிவேக கொரோனா பரவல், அதன் தொடர்ச்சியாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது.
எனினும், தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா 3 வது அலை தீவிரமாக பரவி, தற்போது அடங்கி உள்ள நிலையில், நாள்தோறும் மிக குறைந்த எண்ணிக்கையில் அது பரவிக்கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில், கொரோனா 4 வது அலை பற்றிய கணிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், “இந்தியாவில் கொரோனா 4 வது அலையானது, வருகிற ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோடபர் 24 ஆம் தேதி வரை நீடிக்கும்” என்கிற அதிர்ச்சி தகவலை வெளியிட்டப்பட்டது.
தற்போது, மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலாக “சீனாவின் உகான் மார்க்கெட்டில் இருந்து தான் கொரோனா என்னும் கொடிய நோய் பரவியது” என்று, விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் மீண்டும் கண்டுபிடித்து உள்ளனர்.
அதாவது, கொரோனா உருவானது தொடர்பாக கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்திய நிலையில், “ஹுனன் மார்க்கெட்டில் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக கண்டறியப்பட்டது என்றும், சீனாவில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரசை செயற்கையாக சீனா உருவாக்கியதாகவும்” ஒரு கருத்து உலவி வந்தது.
இந்த நிலையில் தான், விஞ்ஞானிகள் சிலர் “கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று 3 ஆய்வுகளை நடத்தினார்கள். அதன் படியான சில முடிவுகளை அந்த விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டு உள்ளனர்.
இந்த ஆய்வில் 2 ஆய்வுகளில், “உகான் நகரில் உயிருடன் பாலூட்டி ரக விலங்குகளை விற்கும் ஹுனன் மொத்த மார்க்கெட்டில் இருந்து தான் கொரோனா பரவியதாக அவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்” என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
அத்துடன், கொரோனா மாதிரிகளுக்கும், ஹுனன் மார்க்கெட்டுக்கும் இடையிலான தொடர்பை புவியியல் சார்ந்த பகுப்பாய்வு மூலமாக விஞ்ஞானிகள் உறுதி செய்து உள்ளனர்.
மேலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட 3 வது ஆய்வில், “அதே மார்க்கெட்டில் விற்கப்பட்ட விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 தடவை கொரோனா பரவியதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால், சீன ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை” என்றும், விஞ்ஞானிகள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த ஆய்வுகளை நடத்தியவர்களில் ஒருவரான அரிசோனா பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் ஆய்வாளர் மைக்கேல் வோரோபி, “எல்லா ஆய்வுகளையும் இணைத்து பார்த்தால், ஹுனன் மார்க்கெட்டில் இருந்து கொரோனா உருவானது தெளிவாக தெரிகிறது” என்றும், கூறியுள்ளார்.
அதே நேரத்தில், “எந்த விலங்கில் இருந்து கொரோனா பரவியது என்று விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவிக்கவில்லை” என்றும், கூறியுள்ளார்.
ஆனால் “ரக்கூன் டாக் என்ற பாலூட்டி வகை நாயிடம் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம்” என்று, கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்பவர் கணித்து உள்ளார்.
குறிப்பாக, “இந்த விலங்கு, உணவுக்காகவும், உரோமத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது” என்றும், விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.