கொரோனா வைரஸால் உலக அளவில் 7 கோடிக்கும் அதிகமானோர் இறந்து உள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து எல்லா மக்களுக்கும் கிடைக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் ஏற்கனவே கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்த ஆரம்பித்து இருக்கும் நிலையில், இந்தியா உட்பட மற்ற நாடுகள் இறுதி கட்ட ஆய்வில் இருக்கிறது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பிறகும் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதால் ஆய்வு பணியில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.


இந்நிலையில், ஐநாவின் கொரோனா தடுப்பு மருந்து கூட்டமைப்பு சுமார் 200 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை பல்வேறு தடுப்பு மருந்து நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் , ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.