தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி 2015ம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்களை விட சின்ன சின்ன வைரஸ் தான் பேராபத்தை விளைவிக்க போகிறது என்றார். அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அன்று அவர் சொன்னதை இன்று உலகம் சந்தித்து வருகிறது.
கண்ணுக்கு தெரியாத வைரஸ்களால் பல கோடி உயிர்கள் பலியாக நேரும் என்றும் அதனால் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் , ’ சுவாச வைரஸ்கள் ஒவ்வொன்றாக தோன்ற இருக்கிறது. அவை எல்லாம் மிகவும் ஆபத்தானவை. இன்னும் மனிதர்கள் எதிர்கொள்ள தயாராகாத இரண்டு பேரழிவுகள் வர இருக்கிறது. அதில் முதலாவது, பருவநிலை மாற்றம். கொரோனாவை காட்டிலும் கூடுதலாக இந்த பருவநிலை மாற்றத்தால் உயிரழப்புகள் ஏற்பட உள்ளது.
மற்றொன்று பயொ தீவிரவாதம், அதாவது ஒரு நாட்டை தாக்க நினைவர்கள், ஒரு வைரஸை உருவாக்குவார்கள். இயற்கையாக தோன்றும் வைரஸ் பாதிப்பை விட இந்த பயொ தீவிரவாதம் அதிபயங்கரமா இருக்கும். “ என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.