“சின்னஞ் சிறு வயதில் அதிகமாக அவமானப்படுத்திய ஆசிரியரை, 30 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவன் ஒருவன், 101 முறை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெல்ஜியம் நாட்டில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 37 வயதான குண்டெர் உவென்ட்ஸ் என்பவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த 37 வயதான குண்டெர் உவென்ட்ஸ், கடந்த 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் “தனக்கு 7 வயதாக இருக்கும் போது, இங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
அப்போது, அந்த தனியார் பள்ளியில் மரியா வெர்லிண்டேன் என்ற ஒரு ஆசிரியர் பணியாற்றி வந்தார். இந்த ஆசிரியர் தான், குறிப்பிட்ட இந்த 7 வயது மாணவனுக்கு வகுப்பு ஆசிரியராக இருந்திருக்கிறார்.
அப்போது, பள்ளி ஆசிரியர் மரியா வெர்லிண்டேன், குண்டெர் உவென்ட்சை அடித்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது.
இப்படியாக, அந்த 7 வயது சிறுவனாக இருக்கும் போது, சிறுவன் என்று கூட பார்க்காமல், அடிக்கடி ஆசிரியர் மரியா வெர்லிண்டேன், அடித்து அவமானப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால், அந்த 7 வயதிலேயே இந்த ஆசிரியர் மீது கடும் கோபம் அடைந்த குண்டெர் உவென்ட்ஸ், கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கு பழிதீர்த்துக்கொள்ள தற்போது முடிவு செய்திருக்கிறார்.
அதன் படி, அந்த தன்னை அடித்து அவமானப்படுத்திய ஆசிரியர் மரியா வெர்லிண்டேனுக்கு தற்போது 59 வயது ஆகும் நிலையில், அவர் தனது முதுமையான வயதில், தனது குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார்.
எனினும், அந்த பள்ளி ஆசிரியர் மரியா வெர்லிண்டேனை தேடிக் கண்டுப்பிடித்து அவரை பழி தீர்க்க சென்று உள்ளார். அப்போது, அவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில், தான் கொண்டுச் சென்ற கத்தியை எடுத்து அந்த பள்ளி ஆசிரியரை கிட்டதட்ட 101 முறை வெறி தீர கத்தியால் குத்தி மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார்.
இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், எந்த துப்பும் கிடைக்காமல் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இப்படியாக, தனது ஆசிரியரை வெறி தீர 101 முறை கத்தியால் குத்தி கொன்றதை, அந்த நபர் தனது சக பள்ளி நண்பரிடம் கூறியிருக்கிறார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த நண்பர், இந்த கொலை சம்பவம் பற்றிய தகவலை, போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், சம்பவ இடத்தில் கிடைத்த ரத்த மாதிரியை கொண்டு அவரிடம் டிஎன்ஏ சோதனை நடத்தினர்.
அந்த பரிசோதனையில் 37 வயதான குண்டெர் உவென்ட்ஸ் என்பவர், குற்றவாளி என்பது உறுதியானது. இதனையடுத்து, தலைமறைாக இருந்த அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், கிட்டதட்ட கொலை நடந்து16 மாதங்களுக்கு பிறகு கொலையாளியான குண்டெர் உவென்ட்சை போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் தான், 30 வருடங்களுக்குப் முன்பு, அடித்து அவமானப்படுத்திய காரணத்திற்காக, அந்த ஆசிரியரை கொலை செய்த விசயமும் தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம், அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.