மதுபோதையில் தனது மகள் காரின் டயரில் சிக்கி இருப்பது கூட தெரியாமல் தாய் ஒருவர் காரை வேகமாக ஓட்டிச்சென்ற அதிர்ச்சி சம்பவ அரங்கேறியுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி மாகாணம் காரிங்பக் பகுதியை சேர்ந்தவர் டெல் பல்மர் அவரது வயது 58. இவரது கணவர் வாரன் பல்மர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் கெலி பெனித் வயது 27. டெல் பல்மர் மதுக்குடிக்கும் பழக்கமுடையவர். மேலும் அவ்வப்போது அளவுக்கு அதிகமாக மதுகுடிப்பத்தை அவரது மகள்கள் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மே 2-ம் தேதி மாலை மதுபான விருந்தில் பங்கேற்ற டெல் பல்மர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிலும் அவர் மது குடித்துள்ளார். அப்போது, அவரது மற்றொரு மகள் டெல் பல்மரை கண்டித்துள்ளார். அப்பொழுது கோபமடைந்த டெல் வீட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார். டெல் வீட்டின் முன் நிறுத்தியிருந்த தனது காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார்.

அப்பொழுது தான் அந்த அசம்பாவிதம் ஏற்பட்டது, கார் முன் தனது மற்றொரு மகளான கெலி பெனித் நின்றுகொண்டிருந்துள்ளார். மது போதையில் இருந்த டெல் கார் முன் தனது மகள் நிற்பதை கவனிக்கவில்லை. காரை வேகமாக ஓட்டியதால் கெலி பெனித் காரின் டயரில் சிக்கிக்கொண்டார். காரின் முன்பகுதிக்கும் டயருக்கும் இடையே அவர் சிக்கிக்கொண்டுள்ளார். இதனால், உடனடியாக காரை நிறுத்தும்படி கெலி பெனித் கத்தியுள்ளார். ஆனால் மதுபோதையில் இருந்த தாய் டெல் பல்மரின் காதிற்கு தனது மகளின் கதறல் கேட்கவில்லை.

அதனைத்தொடர்ந்து டெல் பல்மர் காரை வேகமாக இயக்கியுள்ளார். இதனால், காரின் அடியில் சிக்கிய கெலி பெனித் சில மீட்டர்கள் தூரம்வரை இழுத்துச்செல்லப்பட்டார். மகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கத்தியதில் இறுதியாக டெல் காரை நிறுத்தியுள்ளார். ஆனால், காரின் டையரில் சிக்கிய கெலி பெனித் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். படுகாயமடைந்த கெலி பெனித் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல மாத சிகிச்சைக்கு பின் அவரின் உடல்நிலை தற்போது சீரடைந்துள்ளனர்.

மேலும் இதனைத்தொடர்ந்து மதுபோதையில் மகள் காருக்கு அடியில் சிக்கி இருப்பது கூட தெரியாமல் ஓட்டிச்சென்ற தாய் டெல் பல்மர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அந்த விசாரணையின் போது தனது மகளிடமும், அண்டை வீட்டாரிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாக டெல் பல்மர் கூறினார். அதேவேளை, டெல் பல்மர் சம்பவம் நடைபெற்ற அன்று நிர்ணையிக்கப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிக மதுபோதையில் கார் ஓட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டு அடுத்த மாதம் 26-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.