உத்திரப் பிரதேச மாநிலத்தில் சாமியர் ஒருவர், கொரோனா மருந்து என மது கொடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் கொரோனா என்னும் பெருந் தொற்றுக்கு உலகமே, மருந்து கண்டு பிடிப்பு பணியில் முழு வீச்சில் இறங்கி உள்ளது. இது வரை பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடைபெற்றாலும், ஆனால் தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க முடியால் மருத்துவ உலகம் திணறி வருகிறது.
அதே சமயத்தில், கொரோனாவுக்க மருந்து கண்டுப்பிடித்து விட்டதாக அவ்வப்போது, சிலர் வதந்திகளைப் பரப்புவது உண்டு. அதே போல் தான், உத்திரப் பிரதேச மாநிலத்தில் சாமியர் ஒருவர், கொரோனாவு்கு மருந்து கண்டுப் பிடித்து விட்டதாகக் கூறி, ஆசிரமத்தில் உள்ள சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம், முசாபர் நகரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுக்ரட்டல் ஆசிரமத்தை, சுவாமி பக்தி பூஷண் கோவிந்த், மோகன் தாஸ் என்பவருடன் சேர்ந்து நிர்வகித்து வருகிறார். இந்த ஆசிரமத்தில் கல்வி பயில வந்த சிறுவர்கள், வறுமையின் காரணமாக அங்கேயே தங்கிப் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தற்போது அந்த மாநிலத்தில் கொரோனா என்னும் கொடிய தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்த சாமியார் கொரோனா மருந்து என்று கூறி, அங்கு தங்கி இருக்கம் பல சிறுவர்களுக்கு மதுவரை கொடுத்துள்ளார். மருந்து என்று நினைத்து மதுவை குடித்த சிறுவர்கள் அனைவரும் மயங்கி விடுகின்றனர்.
அதன் பிறகு, அந்த சாமியார் அந்த சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, கொடுமைப் படுத்தி உள்ளார். இது குறித்துப் பார்க்கப் பொறுக்க முடியாத அங்குள்ள நபர் ஒருவர், அந்த மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல வாரியத்திற்கு போன் செய்து, இந்த ஆசிரமத்தில் உள்ள சிறுவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதாகப் புகார் கூறி உள்ளார்.
புகாரை அடுத்து, ஆசிரமத்திற்குச் சென்ற போலீசார் முதலில் பாதிக்கப்பட்ட 10 சிறுவர்களையும் ஆசிரமத்தில் இருந்து முதற்கட்டமாக மீட்டு உள்ளனர். மீட்கப்பட்ட 10 சிறுவர்களும் திரிபுரா மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அப்போது மீட்கப்பட்ட சிறுவர்களைப் பரிசோதனை செய்த போது, அந்த 10 பேரில் 4 பேர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், “குற்றம் சாட்டப்பட்ட சாமியார், சிறுவர்களுக்கு கொரோனா மருந்து என்ற பெயரில் கட்டாயப்படுத்தி மது ஊற்றிக் கொடுத்துள்ளார் தெரிய வந்தது. அதன் பிறகு, சிறுவர்கள் போதையில் இருக்கும் போது, ஆபாசப் படங்களை வற்புறுத்திப் பார்க்க வைத்த சாமியார், அதன் பிறகு தான் சிறுவர்களைக் கடுமையாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கடுமையாகக் கொடுமைப் படுத்தி உள்ளார்” என்பதும் தெரிய வந்தது.
அத்துடன், இந்த புகார் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பேசும் போது, “ஆசிரமத்தில் சாமியாரின் பேச்சைக் கேட்க மறுத்தால், அவர் கண்மூடித்தனமாக தாக்குவார்” என்று பாதிக்கப்பட்ட சிறுவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், சாமியார் மீசாட்டில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிசாலி கிராமத்தில் வசிப்பவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தான், இந்த ஆசிரமத்தை அமைத்தார்” என்றும் முசாபர் நகர் எஸ்.எஸ்.பி அபிஷேக் யாதவ் தெரிவித்தார்.
இதனையடுத்து, சாமியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுவாமி பக்தி பூஷண் கோவிந்த் மற்றும் மோகன் தாஸ் ஆகிய இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, சாமியர் ஒருவர், கொரோனா மருந்து என மது கொடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம், உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.