சேப்பாக்கம் - திருவல்லிகேணி மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ உதயநிதி.
சென்னையின் பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இன்று காலை சென்னைக்கு சிறிது இடைவெளி விட்ட கனமழை மீண்டும் வலுக்கத் தொடங்கி நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், தி.நகர், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு பகுதிகளை வெளுத்து வாங்குகிறது.
கனமழையால் பாதிப்படைந்த திருவல்லிகேணி - சேப்பாக்கம் பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின்பார்வையிட்டார். சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் முன்னதாக அங்கு பல நல திட்டங்களை தொடக்கி வைத்துள்ளார். தொடக்கத்தில் தொகுதியில் களப்பணியாற்றி வந்த அவர் அங்குள்ள கழிவறை ஆய்வு, குடிநீர் சோதனை உள்ளிட்டவை கவனித்தார். ஆனால், மழை நீர் வடிய வழி செய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
வீடுகளில் தேங்கியுள்ள மழை நீருடன் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், தேங்கியுள்ள மழைநீரை ட்ரைனேஜ் மூலம் வெளியேயேற்றிக் கொண்டிருந்ததையும் பார்வையிட்டார்.அவரது தொகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் பாதிப்புகள் குறித்துப் பார்வையிட்டார். மேலும், வெள்ள பாதிப்புகளும் குறித்தும் அவர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மழைநீர் சூழ்ந்து வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் லாக்நகர் கிளிமரம் பகுதி மக்களுக்கு வீடுவீடாக சென்று மதிய உணவு வழங்கினோம்.மழைநீரை வடியவைக்கும் பணி நடப்பதையும்,ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் அதுவரை தங்க கேட்டுக்கொண்டோம். தேங்கியுள்ள மழைநீரை கால்வாயில் வடியவைக்கும் பணிகளை ஆய்வு செய்தோம். நீர் மெதுவாக வடிவதால் எந்திரங்கள் மூலம் நீரை உறிஞ்சி நீர்நிலைகளில் விடும் பணியை கழகத்தினர்-மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மேற்கொண்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.