தமிழ்நாட்டில் தக்காளியின் விலை கிடு கிடு என வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள நிலையில், அது தொடர்பாக மீம்ஸ்களை நெட்டிசன்கள் இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழையின் தீவிரம் அடைந்து, தொடர்ந்து கனமழையாகக் கொட்டி தீர்த்து வருகிறது.
அதே போல், ஆந்திராவில் பெய்து வரும் கன மழையால் தமிழகத்திற்குத் தக்காளி வரத்து முற்றிலுமாக குறைந்து உள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் தக்காளி விலை கிடு கிடு என உயர்ந்து சென்னையில் ஒரு கிலோ தக்காளி 150 க்கு ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. இதனால், நடுத்தர மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
அத்துடன், தக்காளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருப்பதால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய தினம் ஒரு கிலோ தக்காளியின் விலையானது, கடந்த 2 நாட்களாக 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதுவும், பெட்ரோல், டீசல் விலையைக் காட்டிலும் அதிகமாகவே தற்காளி விற்கப்பட்டு வருகிறது.
அதாவது, தமிழகத்தில் பெட்ரோல், டீசல், தங்கம் உள்ளிட்டவைகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகமாகக் காணப்படும். ஆனால் பெட்ரோல், டீசல், தங்கம் விலைக்கே டப் கொடுக்கும் வகையில், அந்த அளவிற்குத் தக்காளி விலை தற்போது மிக அதிகமாக விலை உயர்ந்து விற்கப்படுகிறது.
இதனால் தக்காளி வாங்கவே மக்கள் பயந்து யோசிக்கித் தொடங்கி உள்ளனர்.
இதனால், நெட்டிசன்கள் தக்காளியை வச்சு செய்து, மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். இது தொடர்பான, மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றன.
பெட்ரோல்: “தக்காளி போற போக்கப் பார்த்தா, தமிழ்நாட்டுல நம்மள மிஞ்சிடுவான் போலிருக்கே?” என்று, பெட்ரோல் டீசல் தன்னைத் தானே பார்த்து கமெண்ட் அடிப்பது போன்று மீம்ஸ்கள் பரவி வருகின்றன.
மற்றொரு மீம்ஸில்..
மனைவி: “சாப்பிடுங்க” என்று, வெறும் சோறு உடன் வெறும் தக்காளியை அதுவும் ஒரே ஒரு தக்காளியை மட்டும் தட்டில் வைத்து சாப்பிடக் கொடுக்கிறாள்.
இதனைப் பார்க்கும் கணவன்: “என்னடி இது?” என்று கோபமாக கேட்..
மனைவி: “இது தான் தக்காளி சோறு” என்று கூறுவதுபோல் மீம்ஸ் இருக்கிறது.
வடிவேலு படத்தைப் போட்ட ஒரு மீம்ஸில்..
“இப்ப நான் இதை சொன்னால், பணத்திமிர்ல சொல்றேனு நீங்க நினைப்பிங்க, இன்னைக்கு எங்க வீட்டுல தக்காளி சட்னி!” என்பது போல், ஒரு மீம்ஸ் இருக்கிறது.
அதே போல், ஒரு கடையில் ஆப்பிள் மற்றும் தக்காளி கிலோ தலா 140 ரூபாய் என்று விலை ஒட்டப்பட்டிருக்கிறது.
மற்றொரு புகைப்படத்தில், 2 தக்காளியை கவரில் போட்டு பின் பண்ணி அதன் மீது “2 தக்காளி 18 ரூபாய்” என்று விலை ஒட்டப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக, “அய்யயோ, தக்காளி விக்கிற விலைக்கு லோன் வாங்கி தான் ரசம் வக்கணும் போலயே?!” என்றும், ஒரு மீம்ஸ் வேகமாக வைரலாகி வருகிறது.