IPL -க்கே டப் கொடுக்கும் வகையில் IAS - IPS அதிகாரிகள் இடையே கிரிக்கெட் போட்டி தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் முதன் முறையாக IAS - IPS அதிகாரிகள் இடையேயான கிரிக்கெட் போட்டி தமிழக அரசு சார்பில் இன்று தொடங்கி உள்ளது.
இந்த போட்டியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ரயில்வே, ஜிஎஸ்டி, வருமான வரித்துறை, வனத்துறை ஆகிய 6 கிரிக்கெட் அணிகள் இடம் பெற்றுள்ளன.
சனி - ஞாயிறு என வாரம் 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியானது, சுமார் ஒரு மாத காலத்திற்கு நடைபெற உள்ளது. இடையில் அரசு முறை பயணம் அல்லது பணி இருக்கும் பட்சத்தில், அந்த போட்டி மற்றொரு நாளுக்கு மாற்றியமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி, போட்டியின் முதல் நாளான இன்று IAS - IPS அதிகாரிகள் இடையே கிரிக்கெட் போட்டி தொடங்கி உள்ளது.
சென்னை மெரினா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர், “விளையாட்டின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறினார். மேலும் ஆரோக்கியம், உடற்கட்டு, நேர்த்தியான வாழ்க்கை வாழ விளையாட்டு மிக அவசியம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இதனையடுத்து, போட்டியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.