திருச்சியில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான திருமணம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்து பேசும் பொருளமாக மாறியிருக்கிறது.

”அகோரிகள்” பெரும்பாலும், இந்த பார்த்தைகள் அல்லது இந்த வார்த்தைக்கு சொந்தமானவர்களை வட இந்தியாவில் தான் அதிகம் காண முடியும்

”அகோரிகள்” என்னும் இந்த வார்த்தையை பெரும்பாலன தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான “நான் கடவுள்” படம் தான்.

“நான் கடவுள்” திரைப்படம் மூலமாகவே, “அகோரிகள் என்பவர்கள் யார்? அவர்களின் வாழ்க்கை முறையை எப்படி இருக்கும்?” என்பது எளிதாக பலருக்கும் புரிந்தது.

அந்த வகையில், தமிழ்நாட்டிலும் தமிழ் பேசும் அகோரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இருந்து வருவதும் தற்போது தெரிய வந்திருக்கிறது.

அதுவும், இந்த ”அகோரிகள்” தமிழகத்தின் மைய பகுதியான திருச்சி காவிரிக் கரையில் அரியமங்கலத்தில் “ஜெய் அகோர காளி சிலை”யை பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து வருவதும் தற்போது தெரிய வந்திருக்கிறது.

இப்படியாக, திருச்சியில் தமிழ் பேசி “ஜெய் அகோர காளி சிலை”யை பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து வருபவரின் பெயர் மணிகண்டன்.

அகோரியான மணிகண்டன், தனது உடல் முழுவதும் திருநீறு பூசி வலம் வந்தபடி இருக்கிறார்.

அத்துடன், அகோரியான மணிகண்டன் மிக விரைவாகவே சீடர்களும் பெருகி இருக்கிறார்கள். அவர்களும் மணிகண்டனைப் பின் பற்றியே தொடர்ச்சியாக பூஜைகள் செய்து வருகின்றனர்.

இப்படியாக, “காசியில் மட்டுமே வாழ்ந்து வரும் அகோரிகள் தமிழகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, சொந்த ஊருக்கு வந்திருப்பதாக” அகோரி மணிகண்டன் கூறியிருக்கிறார்.

மேலும், “நாங்கள் உயிரிழந்த சடலங்களை திண்பவர்கள் என பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து” இவர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் தான், தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அகோரியான மணிகண்டன் திருமணம், நேற்று நடைபெற்று இருக்கிறது.

முக்கியமாக, அகோரி மணிகண்டனின் திருமணம் தற்போது பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.

அதாவது. அகோரியான மணிகண்டன், தன்னிடம் கடந்த 8 ஆண்டுகளாக அகோரி பயிற்சி பெற்று வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா என்ற அகோரி சிஷ்யையை, தற்போது திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்தின் போது, அகோரி மணிகண்டன் தனது உடல் முழுவதும் திருநீறு பூசி, அகோரி கோலத்தில் இருந்த தனது சிஷ்யை பிரியங்காவை கரம் பிடித்து திருமணம் செய்துகொண்டார்.