பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த டிக்டாக் காதல் மன்னன் கண்ணனை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைத்தளங்கள் தோன்றிய போது, அது புரட்சிக்கு வித்திட்டது. ஆனால், இன்று குற்ற சம்பங்களுக்கு வித்திடுகிறது என்பது வேதனையாக இருக்கிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த சேர்ந்தமரம் பகுதி, கே.பி.அருணாசலபுரத்தைச் சேர்ந்த 22 வயதான கண்ணன், டிக்டாக்கில் “காதல் மன்னன் கண்ணன்” என்ற பெயரில், வலம் வந்துள்ளான்.
டிக்டாக்கில் தினமும், சிரித்து சித்து வீடியோ வெளியிட்டுப் பிரபலமானான். அதில், சினிமா பாடல்களுக்குச் சிரித்த முகத்துடன் நடனம் ஆடுவதும், பிரபலமான சினிமா வசனங்களை சிரித்தபடியே, பேசி அனைவரையும், தனது சிரிப்பால் வசிகரித்து வந்துள்ளான்.
ஒரு கட்டத்தில், காதல் மன்னன் கண்ணனின் சிரிப்பில், பள்ளி மாணவிகள் முதல் பல்லு போன கிழவிகள் வரை பலரும் மயங்கி உள்ளனர்.
இதனையடுத்து, கண்ணனின் டிக்டாக் காமெண்ட் பாக்ஸ்சில், நேரடியாகவே கண்ணனின் போன் நம்பவரை வாங்கி, அவனுடன் சில பெண்கள் நெருங்கிப் பழகி உள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட கண்ணன், அந்த பெண்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்துள்ளான்.
பின்னர் அந்த வீடியோக்களை வைத்து, பணம் கேட்டு மிரட்டத் தொடங்கி உள்ளான். பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாம், மானத்திற்குப் பயந்து, கண்ணன் கேட்கும்போதெல்லாம் பணத்தைத் தந்து வந்துள்ளனர்.
ஆனால், பணம் எவ்வளவு கொடுத்தாலும், மீண்டும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால், பயந்துபோன பள்ளி மாணவி ஒருவரும், திருமணமாகி 2 குழந்தைகளுக்குத் தயாரான பெண் ஒருவரும், தென்காசி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கண்ணனை கைது செய்து அவனது செல்போனையும் பறிமுதல் செய்து பார்த்துள்ளனர்.
அப்போது, 50 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் பல குடும்ப பெண்களை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, அவர்களிடம் அடுத்தடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது. இதனால், பதறிப்போன போலீசார், கண்ணனின் காதல் லீலைக்கு யாரெல்லாம் காரணம் என்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, “காதல் தேகத்தில் வீடியோ வெளியிடும் பெண்கள்தான் எனது டார்கெட் என்றும், அவர்களைக் குறிவைத்தே, இந்த வீடியோக்கள் எடுத்ததாகவும்” கூறியுள்ளான்.
மேலும், டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து, தனது முன்னோடி என்றும் காதல் மன்னன் கண்ணன் கூறியுள்ளான். இதனால், ஜி.பி.முத்துவையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.
காதல் என்னும் சிறகு முளைத்துப் பறந்து திரிந்த காதல் மன்னன் கண்ணன், தற்போது சிறகு முறிந்த பறவையாகச் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.