டிக்டாக் பிரபலம் 16 வயது இளம் பெண் சியா கக்கர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அவரது ரசர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“இது பிரபலங்கள் தற்கொலை செய்யும் காலம் போல?!” சமூகத்தில் மிகவும் பிரபலமாக இருப்பவர்களே தற்போது தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். அதில், பெரும்பாலும் தங்களுடைய தற்கொலைக்கான காரணங்களை சொல்லாமலேயே சென்று விடுகின்றனர்.
சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் பிரபலம், இந்தி திரை உலகில் மிகவும் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங், தன்னுடைய வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், இந்திய அளவில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கான காரணம் முழுமையாக தெரியாத நிலையில், அவர் இறந்த துக்கத்தில் அவரது ரசிகர்கள் வட இந்தியாவை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து இதுவரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனினும், சுஷாந்த் சிங், மன உளைச்சலால் தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் ஒரு புறம் கூறப்படுகிறது.
அப்படியான ஒரு தற்கொலை தான், தற்போதும் நடந்துள்ளது. இந்த தற்கொலையும், சுஷாந்த் சிங் தற்கொலையை போலவே, இந்தியா முழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லி கீதா காலனி பகுதியைச் சேர்ந்த 16 வயதான சியா கக்கர், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். மேலும், படித்துக்கொண்டே, அவர் பகுதி நேரமாக நடனமும் கற்று வந்தார்.
பள்ளியில் படிக்கும் போது, பொழுது போக்குக்காக டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் சியா கக்கர். அதன் மூலம் சியா கக்கர் பிரபலமும் ஆனார். சியா கக்கர் எந்த வீடியோ பேசினாலும், அது சமூக வலைத்தளங்களில் ஹிட் அடிக்கும். டிக்டாக்கில் சுமார் 11 லடசத்துக்கும் அதிகமான பலோயர்ஸ், அவரை பின் தொடர்ந்து வந்தனர். அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அவரை பின் தொடர்கின்றனர்.
டிக்டாக், இன்ஸ்டாகிராம் மட்டும் இன்றி ஸ்னாப்சாட், யூடியூப் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் சியா கக்கர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் தான், கடந்த 24 ஆம் தேதி இரவு 9 மணி அளவில், அவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம், அவரை பின் தொடரும் 11 லடசத்துக்கும் அதிகமான அவரது ரசிகர்களையும், கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இது குறித்து, விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சியா கக்கரின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தற்போது நடைபெற்று வரும் முதற்பட்ட விசாரணையில், “கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், சியா கக்கர் ஆரும்பம் முதுலே வீட்டிலேயே முடங்கி இருந்தார் என்பது” தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, அவர் கடந்த ஒரு வார காலம் கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டார்” என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
“ஒரு வேளை மன அழுத்தம் கடுமையாக அதிகரித்ததால், சியா கக்கர் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம்” என்றும் போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர்.
மேலும், “கடுமையான மன அழுத்தம் காரணமாக தான், சியா கக்கர் தற்கொலை முடிவை எடுத்தாரா? அல்லது இதற்கு வேறு எதாவது காரணம் இருக்கிறதா?” என்ற கோணத்திலும் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், இது தொடர்பாக சியா கக்கரின் மேலாளர் அர்ஜுன் தெரிவித்துள்ள கருத்தில், “நேற்று முன் தினம் என்னுடன் அவர் ஒரு பாடல் ஒத்துழைப்புக்காக பேசும் போது கூட, அவர் நல்ல மன நிலையில் தான் இருந்தார். பிறகு அவர் எதற்கு தற்கொலை செய்து கொண்டார் என்று எனக்கு இப்போது வரை புரியவில்லை. அவருடைய வீடியோ பார்த்தால், அவர் மிகவும் நல்லவர் என்பது உங்களுக்கே புரியும்.
சியா கக்கர் தற்கொலை முடிவை எடுத்தது ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. தயவு செய்து உங்களில் யாருக்கேனும் மன சேர்வு ஏற்பட்டால், இப்படியான ஒர முடிவை எடுக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், சமூக வலைதளத்தில் சியா கக்கரை பின் தொடரும் அவரது ரசிகர்கள் பலரும், அவருக்கு இரங்கலும், வருத்தமும் தெரிவித்து வருகின்றனர். இதனால், டிக்டாக் சமூக வலைத்தள ரசிகர்களே தற்போது சோகத்தில் மூழ்கி உள்ளனர்.