ஜெய் பீம் படத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் நடிகர் சித்தார்த் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ்க்கு நடிகர் சூர்யா பதில் அறிக்கையாக எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதியாகத்தான் நடந்து கொல்கிறாரகள் இதில் சாதி இன் மதம் மொழி பேதம் இல்லை இதற்கு உலகம் முழுவதும் சான்று உள்ளது எனவும் படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கியே எழுப்பிய கேள்வியை குறிப்பிட்ட அரசியலுக்குள் சுருக்கவேண்டாம். அநீதிக்கு எதிரான போராட்ட குரல் பெயர் அரசியலால் நீர்த்து போகிறது என்றும் சகமனிதனின் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தருகிறேன் சமத்துவம் சகோதரத்துவம் பெறுக அவரவர் வழியில் தொடர்ந்து செயல் படுவோம் என்று புரிதலுக்கு நன்றி என சூர்யா அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு கொடுத்துவருகினறனர். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்தார் அதனை தொடர்ந்து நடிகை ரோகினி, இயக்குனர் பாரதிராஜா போன்ற திரை பிரபலங்கள் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கினறனர். எல்லா தரப்பு மக்களின் பேரன்பும் பேராதரவும் நாடு முழுவதும் நடிகர் சூர்யாவிற்கு உள்ளது. வன்னியர்கள் விமர்சனங்களை தொடர்ந்து மக்கள் சமூக வலைத்தளங்களில் #istand withsurya என்ற hashtag-யிட்டு மக்கள் தங்கள் ஆதரவுகளை சூர்யாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த்தும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ' நாங்கள் கமல்ஹாசனுடன் நின்றோம், விஜய்யுடன் நின்றோம், சூர்யாவுடன் நிற்கிறோம். கருத்து வேறுபாடுகள் அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு கலைஞரை அச்சுறுத்துவது அல்லது கலைப் படைப்பை அச்சுறுத்துவது கோழைத்தனம் என்று நம்பும் எவரையும் இந்த 'நாங்கள்' குறிக்கிறது.' ஜெய்பீம் படக்குழுவினருடன் நான் நிற்கிறேன் என ட்விட்டரில் நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.