அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புவோர் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்..
கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மக்கள், வீடுகளில் முடங்கி உள்ளனர். இதன் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் தலா ரூ.1000 இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காகப் பொதுமக்கள் சிலர் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். இதனால், வெளியே சென்று விட்டு வீடு திரும்புவோர், என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்..
- வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முன், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- வெளியிடங்களில் உள்ள கதவின் கைப்பிடி, லிப்ட் பட்டன் உள்ளிட்ட எந்த இடத்தையும் நேரடியாகத் தொடாமல், டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தித் தொட வேண்டும்.
- அப்படி, பயன்படுத்தப்படும் டிஷ்யூ காகிதத்தைக் குப்பைத் தொட்டிக்குள் உடனடியாக போடுவது நலம்.
- ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்திய பிறகு கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.
- வேலை முடிந்து வீடு திரும்பும் போது, காலணிகளை வீட்டின் வெளியே சற்று தள்ளி விட வேண்டும்.
- வெளியிலிருந்து வீட்டிற்குள் கொண்டு வரும் பொருட்களை, பிளீச் கலந்த நீரில் சுத்தம் செய்வது அவசியம்.
- வீட்டிற்குள் நுழைந்ததும், எந்த பொருளையும் தொடாமல் செயல்பட வேண்டும்.
- வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் வந்ததும் குளிக்கலாம்.
- குறைந்தது கை, கால், முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.
- கையுறைகளை அணிந்திருந்தால், அவற்றை அகற்றிய பின் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
- செல்போனை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது அவசியம்.
- பொது இடங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்திய வண்டி சாவி, கார் சாபி, பாக்கெட் சீப்பு, ஃபர்ஸ் உள்ளிட்ட பொருட்களை ஏதாவது ஒரு பெட்டியில் தனியாக வைத்துக்கொள்வது நல்லது.
- வெளியே சென்றபோது அணிந்திருந்த உடைகளை உடனடியாக தண்ணீரில் நனைத்து போட வேண்டும் அல்லது தணியாகத் துவைக்கப் போட வேண்டும்.
- குறைந்தது 20 வினாடிகள் வரை கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
- முகத்தில் கைகளை வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- கண், காது, மூக்கு ஆகியற்றில் கை வைப்பதைத் தவிர்ப்பது நலம்.
- அவ்வப்போது கிருமி நாசினி கொண்டோ அல்லது சோப் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.