தமிழகத்தில் பள்ளிகள் 4 மாதங்களுக்கு பிறகும், கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் பரவி வந்த கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.

ஆனாலும், இடையில் அவ்வப்போது ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கும், செமஸ்டர் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், நோய்த் தொற்றின் தாக்கம் இன்னும் தீவிரம் அடைந்த காரணத்தால், மீண்டும் கல்விக்கூடங்கள் அப்படியே முழுவதுமாக மூடப்பட்டன.

இந்த நிலையில் தான், நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகளும் நடத்தப்படாமல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்த நிலையில், தற்போது நோய் பரவல் சற்று குறைந்து வந்ததைத் தொடர்ந்து, பள்ளிகள் - கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வந்தது.

அதன்படி, ஒவ்வொரு துறை சார்ந்த உயர் அதிகாரிகள், இது தொடர்பாக ஆலோசனை நடத்திய நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசித்து வந்தன.

இவற்றுடன், தமிழகத்தில் அளிக்கப்பட்டு வந்த ஊரடங்கு தளர்வில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியானது.

இந்த அறிவிப்பின் படியே, தமிழகத்தில் கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் பள்ளிகளும், 5 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் கல்லூரிகளும் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில், பள்ளிகள் 4 மாதங்களுக்கு பிறகும், கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகும் இன்று முதல் தற்போது திறக்கப்பட்டு உள்ளன.

அதன் படி, பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், கல்லூரிகளைப் பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிரப் பிற மாணவர்களுக்குச் சுழற்சி முறையிலும், அதிலும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களுடன், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, “கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே வகுப்புக்குள் செல்ல அனுமதியளிக்கப்படுகின்றனர்.

முக்கியமாக, பள்ளி வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளன.

மிக முக்கியமாக, தமிழகம் முழுவதும் கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால், மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, பள்ளி சீருடையுடன் உற்சாகமாகப் பள்ளிகளுக்குப் புறப்பட்டுச் சென்றதை இன்றைய தினம் காணமுடிந்தது.

இதனிடையே, தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.