கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது.
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பொன்தாராணி என்கிற 17 வயது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மாணவி பொன்தாராணி தற்போது மாநகராட்சி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அவர் இதற்கு முன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி தற்கொலைக்கு காரணம் என புகார் எழுந்த நிலையில், அவரை போலீசார் போக்சோ பிரிவில் கீழ் போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து மிதுன் சக்கரவர்த்தி போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் நீதிபதி இவ்வழக்கை விசாரித்து, வரும் 26ம் தேதி வரை மிதுன் சக்கரவர்த்தியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து மிதுன் சக்கரவர்த்தி உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.மாணவி பொன்தாராணி புகார் அளித்தும் சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் , பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் இதனையடுத்து தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.இந்நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தற்போது மீரா ஜாக்சனிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறது காவல்துறை.
பொன்தாரணிக்கு அஞ்சலி: பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் , அரசியல் பிரமுகர்கள் பொன்தாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் நேரடி காட்சிகளை கீழ்க்காணும் galatta voice YouTube லிங்க்-ல் பார்க்கவும்.