கோவையில் அலுவலகம் தொடங்கி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் ரூ.300 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலத்திற்க்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சிலர் ஆன்லைன் முறையில் பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர், காளப்பட்டியில் தலைமை அலுவலகத்தை தொடங்கி யூடியூப் சேனல் மூலம் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் அறிமுகம் ஆகி, போரெக்ஸ் டிரேட் எனப்படும் அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஆன்லைல் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தனர்.
அதனையடுத்து யூடியூபில் பணத்தை தன் மூலமாக முதலீடு செய்தால் முதலீட்டு தொகையுடன் சேர்த்து மாதம் 8 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்குவதாக உறுதியளித்தார். அதாவது ஒரு நபர் அவரிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அவர் மாதம்தோறும் அசலில் ரூ.10 ஆயிரம், வட்டியாக ரூ.8 ஆயிரம் என ஒவ்வொரு மாதமும் தலா ரூ.18 ஆயிரம் வீதம் 10 மாதத்தில் திருப்பிச் செலுத்துவதாக வாக்குறுதி கொடுத்தார். மேலும் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறுமாதிரியான வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். மேலும் இதற்காக மாவட்டம் தோறும் அலுவலகம் அமைத்து இதில் பொதுமக்களை சேர்த்துவிடும் வேலைக்கு இடைத்தரகர்களை நியமித்து அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்து உள்ளார்.
மேலும் இந்நிலையில் இரண்டு மாதங்கள் மட்டும் அசல் மட்டும் வட்டியை சரியாக கொடுத்தவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும் இது குறித்து ஏற்கனவே ஆன்லைன் முறையில் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது முதலீட்டு பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்தனர்.
ஆனால் ஆன்லைன் மூலம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் அரசியல்வாதிகள், வெளிநாட்டில் பணி புரிபவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தான் அதிகளவில் உள்ளனர். இவர்களில் ஒரு சிலர் ரூ.1 கோடிக்கும் மேல் இதில் முதலீடு செய்து தற்போது தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.