“பிபின் ராவத் பயணத்தின் உண்மையான காரணம் மற்றும் பயணம் தொடங்கியது முதல் இறப்பு வரை நடந்தது என்ன?” என்பது பற்றி சில தவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு இன்றைய தினம் நடக்க இருந்த ராணுவ உயர் அதிகாரிகளுக்கான கருத்தரங்கு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 4 பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டத்தில் உள்ள சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து நேற்று காலை 11.30 மணி அளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி வந்து உள்ளனர்.
அதாவது, சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு சேர்வதற்கு சுமார் 35 நிமிடங்கள் ஆகும். ஆனால், சூலூரில் இருந்த புறப்பட்ட இந்த ஹெலிகாப்டரானது சரியாக 12.20 மணிக்கு காட்டேரி என்னும் பகுதியில் விபத்தில் சிக்கியிருக்கிறது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர், குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி மலை பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த சென்றுக்கொண்டிருந்த போது, சற்று தாழ்வாக பறந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், அந்த நேரம் பார்த்து மிக அதிக அளவிலான பனிமூட்டம் ஏற்பட்டதாகவும், இதனால் சரியான பாதை தெரியாத நிலையில், அந்த ஹெலிகாப்டர் சற்று தாழ்வான பகுதியில் பயணித்ததாகவும், அடுத்த கனவே கட்டுப்பாட்டை விழந்து திடீரென்று வெடித்து சிதறி கீழே விழுந்த வேகத்தில் தீ பற்றி எரிந்ததாகவும் பதை பதைக்க வைக்கும் கடைசி நிமிட காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
முக்கியமாக, அடுத்த 5 நிமிடத்தில் வெலிங்டன் சென்றுசேர வேண்டிய நிலையில் இருந்த அந்த ஹெலிகாப்டர், எதிர்பாரத விதமாக விபத்தில் சிக்கி விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரிந்திருக்கிறது.
குறிப்பாக, இந்த கோர விபத்து குறித்து தகவல் கிடைத்த அடுத்த 15 நிமிடத்தில் மிகச் சரியாக மதியம்12.35 மணி அளவில் அங்குள்ள போலீசார் மற்றும் மீட்பு படையினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, மதியம் 12.40 மணிக்கு 8 ஆம்புலன்ஸ்கள் அங்கு வந்திருக்கின்றன.
அதே நேரத்தில், வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரியில் இருந்து ராணுவ வீரர்கள் மிகச் சரியாக 12.45 மணிக்கு விபத்து நடந்த இடத்துக்கு சென்றடைந்து, உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அத்துடன், இந்திய விமானப் படை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், மாலை 5.15 மணி அளவில் தான் விபத்து நடந்த இடத்துக்கு சென்று, அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட மொத்தம் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபாத்தன நிலையில், தீவிரமாக சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
முக்கியமாக, இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக இந்திய விமானப்படையின் டிவிட்டர் பக்கத்தில் மிகச் சரியாக நேற்று மாலை 6.03 மணிக்கு தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.