அமெரிக்கப் பெண் என முகநூல் மூலம் பேசி பெண் ஒருவர், ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞரிடம் மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த சிவஹரி என்ற இளைஞர், குவைத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இளைஞர் சிவஹரிக்கு ஃபேஸ்புக்கில் கிளாரா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஆகி உள்ளார். இதனால், அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நட்பில், அந்த பெண் கிளாரா, “நான் அமெரிக்காவை சேர்ந்தவர்” என்றும், அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
இப்படியாக, மிக நீண்ட நாட்களாக மெசஞ்சரில் தொடர்ந்த நட்பால் கிளாரா, தன் தந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பணம் தந்து உதவுமாறும், அவரை தற்போது சென்னையில் தான் சேர்த்து உள்ளதாகவும் அந்த பெண் மணி கூறி இருக்கிறார்.
இதை நம்பிய அந்த இளைஞர் சிவஹரி, ஆன்லைன் மூலம் 4 தவணைகளாக சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், கிளாராவுக்கு அந்த பணம் கைக்கு வந்தததும், தனது சுய முகத்தை அந்த பெண் கிளாரா காட்டத் தொடங்கி உள்ளார். அதாவது, தனது ஃபேஸ்புக் பக்கத்தை அந்த பெண் பிளாக் செய்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இளைஞர் சிவஹரி, தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என உணர்ந்து, தமிழக டிஜிபிக்கு ஆன்லைனில் புகார் அனுப்பி உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் எஸ்.பி உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, அமெரிக்க பெண் போல் பழகி மோசடி செய்தவரை தேடி வருகின்றனர்.
அதே போல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பல்வேறு விசித்திரமான சம்பவங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.
அதாவது, இந்த கொரோனா காலத்தில், வீடியோ கால் மூலமாக கூட கல்யாணம் நடைபெற்று நாம் பார்த்தது உண்டு. ஆனால், இங்கு நடைபெற்ற ஒரு
கல்யாணத்திற்கு, ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதன் படி, சிவ பிரகாஷ் - மஹதி என்ற புதமண தம்பதியரின் திருமணம் தொடர்பான திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த இளம் ஜோடியின் திருமணம் அன்று நடைபெற்றுள்ள நிலையில், அவரது திருமண அழைப்பிதழில் தங்களது திருமணத்தை வீடியோ மூலம் நேரலையில் காண விரும்புபவர்களுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதன் மூலம், மணமக்களின் திருமண நிகழ்வை கண்டு அவர்களை வாழ்த்தவும் அந்த மணமக்கள் கேட்டுக்கொண்டனர்.
முக்கியமாக, அந்த அழைப்பிதழில், “கல்யாண சாப்பாடு அவரவர் வீடு தேடி வரும்” என்று, குறிப்பிடப்பட்டு உள்ளது அந்த பகுதி மக்களின் கவனத்தை அதிகம் பெற்றுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், “சோறு முக்கியம் பாஸ்” பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதனால், இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.