ராஜஸ்தான் மாநிலத்தில் கள்ளக் காதல் காரணமாக, கணவனை கொடூரமாக கொலை செய்ய திட்டமிட்ட மனைவி, கொலை செய்யும் நேரத்தில் கணவனுக்கு வலிக்கும் என்று இரக்கம் காட்டிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்த மனராம் என்பவர், தன் 30 வயதான மனைவி பப்பு தேவி உடன் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.மனராம் - பப்பு தேவி தம்பதியினர் நன்றாகவும், அன்பாகவும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், நாசனமான கள்ளக் காதல் உறவில் பப்பு தேவி, தவறி விழுந்துள்ளார்.

பார்மர் பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு ஆணுடன் பப்பு தேவிக்கு, கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கள்ளக் காதல் ஜோடி இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கள்ளக் காதல் விசயம், மனராமுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த கணவன் மனராம், இது குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

கள்ளக் காதல் விசயம் கணவனுக்குத் தெரிந்த நிலையில், இது குறித்து தனது கள்ளக் காதலனிடம் பப்பு தேவி கூறி இருக்கிறார். இதனால், இருவரும் சேர்ந்து மனராமை கொலை செய்யத் திட்டமிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 15 ஆம் தேதி, கணவர் மனராம் தூங்குவதற்கு முன்பு அவருக்கு தரும் பாலில், அவருக்கே தெரியாமலேயே அவரது மனைவி, தூக்கு மாத்திரையைக் கலந்து கொடுத்து உள்ளார். தூக்க மாத்திரை கலந்த பாலை குடித்த சிறிது நேரத்தில், கணவன் மனராம் மயங்கி ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து. தனது கள்ளக் காதலுக்கு போன் செய்து அவரை தன் வீட்டிற்கு பப்பு தேவி வரவைத்து உள்ளார். கள்ளக் காதலன் வந்ததும், மயக்க நிலையில் இருந்த கணவன் மனராமை பிடித்து இழுத்து வந்து, அவரது “கால் விரல்களில் கரண்ட் ஷாக்” கொடுத்து, கொடூரமான முறையில் அவர்கள் இருவரும் கொலை செய்து உள்ளனர். இதில், மின்சாரம் தாக்கி, மனராம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

அப்போது, மனராமின் காலில் மின்சாரம் செலுத்தும் போது, அவரது காலில் அடிப்பட்டு ரத்தம் கசிந்துள்ளது. அவற்றை எல்லாம் துடைத்து, வீட்டையும் நன்றாகச் சுத்தம் செய்து உள்ளார்.

இதனையடுத்து, கண்களில் நீல கண்ணீர் வடித்து, தன் கணவர் இறந்து விட்டதாகக் கூறி, மனைவி பப்பு தேவி அழுது ஆர்ப்பாட்டம் செய்து நன்றாக நாடகம் ஆடி உள்ளார்.

இது தொடர்பாக போலீசாருக்கு சந்தேகம் வந்த நிலையில், போலீசார் பப்பு தேவியை கண்காணித்து வந்தனர். ஒரு கட்டத்தில், அவர் மீதான சந்தேகப் பார்வை அதிகமாகவே, அவரை அழைத்து விசாரித்து உள்ளனர். அப்போது, கணவனை கொலை செய்ததை, மனைவி பப்பு தேவி ஒப்புக் கொண்டார்.

மேலும், பப்பு தேவி அளித்த வாக்கு மூலத்தில், “என் கள்ளக் காதல் விவகாரம் என் கணவருக்குத் தெரிய வந்ததால், அவர் என்னைக் கண்டித்தார். என் கணவனால், என் உல்லாச வாழ்க்கை எங்கே, தடை பட்டுவிடுமோ என்ற பயத்திலேயே, அவரை மின்சார ஷாக் கொடுத்து கொலை செய்தேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “ என் கணவருக்கு வலிச்சா என்னால தாங்க முடியாது. அதனால தான், என் கணவருக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அவர் மயக்கத்தில் இருக்கும் போது தான், நாங்கள் அவரை கொலை செய்தோம்” என்று, கொடூரத்தில் இரக்கம் காட்டிய கதையை பப்பு தேதி கூறி உள்ளார். இதனால், போலீசார் மட்டுமின்றி, மனராமின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, கள்ளக் காதல் மோகம் காரணமாக, கணவனை கொடூரமாக கொலை செய்யத் திட்டமிட்ட மனைவி, கொலை செய்யும் நேரத்தில் கணவனுக்கு வலிக்கும் என்று இரக்கம் காட்டிய சம்பவம், ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், கணவரின் இறப்பு மற்றும் அதன் பிறகான பப்பு தேவியின் நாடகம் பற்றியும் உள்ளூர் கிராம மக்கள் கடும் அதிர்ச்சியில் உரைந்து போய் உள்ளனர்.