ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று தகவல் தொடா்புக்கான சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்படும் 77-ஆவது ராக்கெட் இது.
கொரோனா காரணமாக 11 மாதங்களாக தடைபட்டிருந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் இஓஎஸ் - 1 செயற்கைக்கோளானது விவசாயம், பேரிடா் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பயன்பாட்டுக்காக , கடந்த மாதம் மீண்டும் தொடங்கப்பட்டடு , பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் கடந்த மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக தற்போது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் வடிவமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று அனுப்பட்ட இருக்கிறது. ஆறு உந்து விசை சக்தியுடன் அந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்தகைய தொழில்நுட்பத்தில் அனுப்பப்படும் 22-ஆவது பிஎஸ்எல்வி ரக ராக்கெட் இது. விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளானது தகவல் - தொடா்பு வசதிக்கான சி-பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் அலைவரிசையை இந்தியப் பரப்பிலும், அந்தமான்-நிகோபா், லட்சத் தீவுகளிலும் பயன்படுத்த இயலும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆராய்ச்சி மையத்திலிருந்து 25 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கி , 3.41 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட உள்ளது