பாகிஸ்தானிலிருந்து வந்த புறா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சர் அருகே பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரோராவாலா போஸ்ட் அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து ஒரு புறா ஒன்று பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் தோள் மீது பறந்து வந்து அமர்ந்ததுள்ளது. மேலும் அந்த புறாவின் காலில் ஒரு துண்டுச் சீட்டு கட்டப்பட்டு இருந்துள்ளது. உடனே அந்த வீரர், சீட்டினை எடுத்து பிரித்து பார்த்த போது அதில் ஒரு செல்போன் எண் எழுதப்பட்டிருந்தது.
பின்னர் இது சம்பவம் குறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் எல்லை பாதுக்காப்பு படையினர் சார்ப்பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புறாவையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் புகாரில், புறா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில், ‘ ஒரு பறவை மீது வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் சாத்தியம் இருக்கிறதா என்று சட்டத்துறையினரிடம் கேட்டுள்ளோம். புறா காலில் துண்டுச் சீட்டில் இருந்த செல்போன் எண் குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறோம்.’ என தெரிவித்துள்ளனர்.