டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக, சென்னையில் ஒரு டீ விலை 15 ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகனான இலங்கை மற்றும் பாகிஸ்தானில் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், அந்த இரு நாட்டிலும் மிகவும் நெருக்கடியான அரசியலில் ஏற்பட்டு உள்ளது.
அந்த வகையில், இலங்கையில் மக்கள் புரட்சி ஏற்பட்டு, அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி, தற்போது அந்நாட்டு பிரதமருக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்தியாவில் கூட, கடந்த 10 நாட்களில் தொடர்ந்து இன்றுடன் 8 வது முறையா பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து உள்ளது.
அதே போல், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் இவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டரின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி, தமிழ்நாட்டில் பெட்ரோல் - டீசல் விலை நாள் தோறும் அதிகரித்த வண்ணமே இருந்து வந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 50 ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இதனால், தமிழகத்தில் ஒரு சிலிண்டரின் விலையானது 965 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது, 268 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து உள்ளது.
அதன்படி ஒரு 19 கிலோ எடையில் இருக்கும் ஒரு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையானது 2,406 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த உணவகங்கள் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் வெகுவாகவே பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே காய்கறிகள், பால், டீத்தூள், சர்க்கரை உள்ளிட்ட அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், உணவுப் பொருட்கள் மற்றும் டீ - காபி ஆகியவற்றின் விலையையும் தொடர்ந்து உயர்த்த வேண்டிய காட்டாயத்திற்கு உணவகங்கள் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் தற்போது தள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் டீ மற்றும் காபி ஆகியவற்றின் விலைகள் தற்போது அதிரடியாக உயர்ந்து உள்ளது.
அதே போல், தமிழகத்தில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் உணவ பண்டங்களின் விலையும் நேற்று முதல் கணிசமான அளவுக்கு உயர்ந்து உள்ளது.
அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு டீ யின் விலையான 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை ஒரே அடியாக நேற்று முதல் உயர்ந்து உள்ளன.
அந்த வகையில் சென்னையில் ஒரு டீ யின் விலையானது 15 ரூபாயாக உயர்த்தப்படும்” என்று, தேனீர் கடை உரிமையாளர் சங்கம் தற்போது கூறியுள்ளது.
அதே போல், “சென்னையில் ஒரு காபியின் விலை 15 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படி, தமிழகத்தில் டீ, காபி யின் விலை ஒரே அடியாக உயர்த்தபடுவதால், டீ மற்றும் காபி பிரியர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.