தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையத்துக்குள் செல்ல பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளன. அதில் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பானது நேற்றைய தினம் கிட்டத்தட்ட 11 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இவற்றுடன், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையத்துக்குள் செல்ல பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, “முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களிலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு” வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ள நிலையில், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பலவிதமான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன

அதே போல், தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, “இன்று காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும்” என்று, மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

“கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில், நிமிடத்திற்கு ஒரு ரயில் இயங்கும் என்றும், நெரிசல் குறைவாக உள்ள இடங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்” என்றும், மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

இரவு நேர ஊரடங்கு காரணமாக, ரயில் நிலையங்களில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், அலுவலகம் செல்வோம் மற்றும் வெளியூர் செல்லும் சக பயணிகள் அனைவரும், அரசின் புதிய கட்டுப்பாடுகளைத் தெரிந்துகொண்டு அவற்றின் படி பயணம் மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.