கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக் ஷா என்பவர் கலந்து கொண்டார். அவரது சான்றிதழ்களை சரி பார்த்த போது அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்து உள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட விசாரணை தொடங்கியது, அதில் அவர் நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பதும் போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தார் என்பதும் கண்டறியப்பட்டது.


மேலும், எப்படி மற்றொரு மாணவி மதிப்பெண்ணை பட்டியலை எடுக்க முடிந்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். பல் மருத்துவர் பாலச்சந்திரன் மற்றும் அவரது மகள் தீக்சா இருவரையும் சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க இருக்கிறார்கள். மேலும் மாணவி சமர்ப்பித்த அழைப்பு கடிதமும் போலி என்பது தெரியவந்துள்ளது.


போலி சான்றிதழ் தயாரித்த பரமக்குடியில் உள்ள கம்யூட்டர் சென்டர் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். மாணவியையும் அவரது தந்தையையும் சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும்.

முதல் அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகவில்லை என்பதால் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பபட்டு இருக்கிறது. இந்தமுறையும் ஆஜராக தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.