2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் , மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி வருகிறது.


கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது ஆனால் தமிழகத்தில் அதே பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்படவில்லை. அதற்கு காரணமாக, எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.


சிவகாசியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் கமல், ” ஓட்டுக்கு நான் பணம் தரமாட்டேன். மற்ற கட்சிகள் ஓட்டுக்கு 5 ஆயிரம் பணம் தந்தால் வாங்காமல் ரூ.5 லட்சமாக கேளுங்கள். நான் சிவகாசியில் வெற்றி பெற்றால் சாலையில் அங்கபிரதட்சணம் செய்வேன். எம்.ஜி.ஆர் மடியில் அமர்ந்தவன் நான். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து. எம்.ஜி.ஆர் நீட்சி நான்” என்று தெரிவித்திருக்கிறார்.


மேலும் தனது ட்விட்டரில் பக்கத்தில் , ‘’ காசுக்காகக் கூடுவது கும்பல்; லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி! மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்” என பதிவு செய்து இருக்கிறார்.