#IPL2022 10 லீக் ஆட்டத்தில் சேஸிங்கில் #DC டெல்லி அணி சொதப்பியதால், அபரமாக பந்து வீசிய குஜராத் அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் 2 வது வெற்றியை பதிவு செய்து அசத்தி உள்ளது.
#IPL2022 கிரிக்கெட் தொடரின் 15 வது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு நடைபெற்ற 10 வது லீக் போட்டியில் #DC டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் - #GT குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி, #GT குஜராத் அணியில் தொடக்க வீரர் சுப்மன் கில் - மேத்யூ வேட், முதலில் களமிறங்கினர்.
இதில், போட்டியின் முதல் ஓவரிலேயே மேத்தீவ் வெட் விக்கெட்டை ரஹிம் வீழ்த்தி அசத்தினார். அதுவும், முஸ்தஃபீர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரில் மேத்யூ வேட் அடித்த பந்தானது, கீப்பரின் தலைக்கு மேல் பந்தை லாகவமாக திருப்ப நினைத்தார். ஆனால், அதை #DC கேப்டன் பண்ட் எளிதாகப் பிடிக்க நாட் அவுட் என்றே கூறினார் அம்பயர்.
இதனால், ரிவ்யூ வரை சென்று முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை #GT குஜராத் இழந்து தவித்தது. பின்னர் வந்த விஜய் சங்கர், பொறுமையாக விளையாடினார். இதனால், பவர்ப்ளே இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு #GT அணி 44 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், விஜய் சங்கர் 13 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து களமிறங்கிய #GT கேப்டன் ஹர்திக் பாண்டியா, சற்று நிதானமாக விளையாடி, 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அத்துடன், சுப்மன் கில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேட்ச் ஆகி வெளியேறினார். கில், 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன், அதிக பட்சமாக 84 ரன்களை விளாசி இருந்தார். பின்னர், ஆட்டத்தின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட் விழவே, 20 ஓவர் முடிவில் #GT அணியானது 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
பின்னர், 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய #DC டெல்லி அணியில் டிம் செஃபர்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். சென்ற போட்டியில், #DC அணியில் நல்ல தொடக்கம் தந்த பிரித்வி ஷா, இந்த முறை வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
குறிப்பாக, இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மந்தீப் சிங், 18 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இதனால், #GT குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், #DC அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிக்கொடுத்து சேஸிங்கில் சொதப்பி வைத்தது.
அப்போது களமிறங்கிய #DC கேப்டன் ரிஷப் பண்ட், சற்று பொறுப்புடன் விளையாடி 29 பந்துகளில் 43 ரன்கள் விளாசஜனார்.
இப்படியாக, #DC டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், #GT குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் #GT அணியானது, இந்த சீசனில் தனது 2 வது வெற்றியை பதிவு செய்து உள்ளது.
இந்த ஆட்டத்தில், 4 விக்கெட்டுகளைக் வீழ்த்திய லோகி ஃபெர்குஸன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே, இன்று நடைபெறும் போட்டியில், சென்னை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.