IPL 2021 பெங்களூரு அணி தடுமாறிய நிலையிலும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 ரன் வித்தியாசத்தில் சொதப்பி தோற்றது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

2021 ஐபிஎல் தொடரின் 6 வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று மோதின. இதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீசு முடிவு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களம் இறங்கினார்கள்.

படிக்கல் 11 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமாரின் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது நிதானமாக விளையாடினார். இதனால், பவர்பிளே ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களை குவித்திருந்தது.

பின்னர், ஷபாஸ் அகமது 10 பந்துகளில் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அணியின் தூண்களான விராட் கோலி 29 பந்துகளில் 33 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 5 பந்துகளில் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு பேரதிச்சி அளித்தனர்.

இதனையடுத்து, களம் கண்ட அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சற்று அதிரடியாகவே ஆடத் தொடங்கினார். இதனால், பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல் அதிக பட்சமாக 47 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலமாக, பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக சஹா, கேப்டன் டேவிட் வார்னர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் பொறுமையாக இருவரும் விளையாடி வந்த நிலையில், 9 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த சஹா, சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால், 2 வது களமிறங்கிய மனீஷ் பாண்டே, கேப்டன் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டியில், சற்று அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட அரை சதம் கடந்தார். கேப்டன் வார்னர், மனீஷ் பாண்டே கூட்டணி நன்றாக ரன் சேர்த்ததால், சன்ரைசர்ஸ் அணி எளிதாக வெற்றிபெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அத்துடன், 24 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலை அப்போது ஏற்பட்டது. அதே நேரத்தில், ஐதராபாத் அணியில் கையில் 8 விக்கெட்டுகள் இருந்தன.

இந்த நிலையில், 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் வார்னர், ஜேமிசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

அதன் தெர்ச்சியாக களமிறங்கிய பேர்ஸ்டோவ் 12 ரன்னில் அவுட்டானார். அதே நேரத்தில், 39 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த மனீஷ் பாண்டேவும் ஆட்டமிழந்தார்.

குறிப்பாக, ஸ்பின்னர் ஷபாஸ் அஹமது வீசிய 17 வது ஓவரில், 3 விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்தது. அந்த ஒரு ஓவரில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு, ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து, அந்த ஆட்டத்தின் போக்கையே அப்படியே மாற்றிவிட்டார்.

இப்படியாக, ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக, இதனால்,

ஐதராபாத் அணியை வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெங்களூரு அணி மிக எளிதாக வெற்றி பெற்றது.

அதாவது, பெங்களூரு அணி சற்று தடுமாறிய நிலையிலும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 ரன் வித்தியாசத்தில் சொதப்பி தோற்றது, தற்போது அந்த அணி மீது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.