கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே தமிழ் நடிகையைத் திருமணம் செய்கிறார்.

தமிழில் “உதயம் என்.ஹெச்.4”, “இந்திரஜித்”, “ஒரு கன்னியும் 3 களவாணிகளும்” ஆகிய படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை ஹர்ஷிதா. மும்பையைப் பூர்விகமாகக் கொண்ட நடிகை ஹர்ஷிதா, தற்போது படங்களில் நடிக்காமல், மும்பையில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் மணிஷ் பாண்டேவுக்கும், திருமணம் செய்ய அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த மணிஷ் பாண்டேவும், மும்பையைப் பூர்விகமாகக் கொண்ட நடிகை ஹர்ஷிதாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், தங்களது காதலை இருவரும் தங்களது வீட்டில் தெரிவித்த நிலையில், இரு வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டு, திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இருவருக்கும் டிசம்பர் 2 ஆம் தேதி, மும்பையில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமண நிகழ்வில் ஏராளமான கிரிக்கெட் வீரர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளனர்.