அண்ணியுடன் ஜல்சாவுக்காக ஏங்கித் தவித்த கொழுந்தன், உல்லாசத்திற்கு வரமறுத்த அண்ணியின் முதுகில் கல்லைக் கட்டி, கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
“பெண், போதையும் கிடையாது, போதைக்குச் சமமானவளும் கிடையாது! பெண் தாய்மையின் மகத்துவம் பொருந்தியவள். இதை உணராத மனிதர்களிடம் தான், பெண் சிக்கி சின்னாபின்னமாக்கப்படுகிறாள்.
காமம் என்பது, எல்லாருக்கும் உள்ள ஒரு இயற்கையான உணர்வு தானே தவிர, அது ஒன்றும் பேரணந்தத்தின் உச்சமில்லை.
காமம் அது பசி. அந்த பசியாறத் தான், ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரைமுறை, தமிழ்நாட்டில் விதிமுறையாக இருக்கிறது. ஆனால், இதை நம்மில் எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?
இதன் விளைவு, கள்ளக் காதலாக வளர்ந்து, கொலையில் முடிந்து, குடும்பம் என்னும் பந்தம் சிக்கலில் சிதைந்து, நடு தெருவுக்கு வந்து நாற்றமெடுத்து விடுகிறது.”
அப்படியொரு உதாரண கதை தான் தற்போது திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்விளாமூச்சி கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான அண்ணாமலை, இவரது மனைவி 40 வயதான மின்னல்கொடி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.
அண்ணாமலை, சென்னையில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், இவர்களது 2 குழந்தைகளும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதனால், மின்னல்கொடி மட்டும் சொந்த ஊரில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனிடையே, அண்ணாமலையின் தம்பி 30 வயதான சவுந்தர் ராஜன் உடன், மின்னல்கொடிக்கு தகாத உறவு இருந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த விசயம், சவுந்தர் ராஜனின் மனைவிக்குத் தெரிந்ததால், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்துள்ளது. ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத இருவரும் தங்களது கள்ளக் காதலை மேலும் வளர்த்து, தனிமையில் சந்தித்து அனுதினமும் உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, சவுந்தர் ராஜனின் மனைவி, மின்னல்கொடியை கண்டித்துள்ளார். அத்துடன், தனது கணவருடன் பேச கூடாது என்றும் எச்சரித்து, கடுமையாக அசிங்கப்படுத்தி உள்ளார். இதனால், மனமுடைந்த மின்னல்கொடி, சவுந்தர் ராஜன் உடனான கள்ளத் தொடர்ந்து துண்டித்து, தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்து வந்துள்ளார்.
அத்துடன், மின்னல்கொடியை உல்லாசம் அனுபவிக்க சவுந்தர் ராஜன் அழைத்தும், அதை ஏற்க அவர் தொடர்ந்து மறுத்துவிட்டார்.
இதனால், கடும் ஆத்திரமடைந்த சவுந்தர் ராஜன், மின்னல்கொடியின் முதுகில் கல்லைக் கட்டி, கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளான்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சவுந்தர் ராஜனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற காம கதைகள் நிகழும்போது, இந்த கதைகளோடு நம்முடைய யோக்கிதைகளையும், நாம் ஒப்பிட்டுச் சரி பார்த்துக்கொள்வது தான், எதிர்கால சமூகத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பது, இன்றைய கால கட்டத்தில் சால சிறந்தது என்று தோன்றுகிறது.