ஐதராபாத்தில் நேருக்கு நேர் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கோவையிலிருந்து ஐதராபாத் வழியாக டெல்லி நிஸாமுதீன் செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில், ஐதராபாத் அருகில் உள்ள “கச்சிகுடா” ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நின்று செல்வதற்காக மெதுவாக சென்றுகொண்டிருந்தது.
அப்போது, அதே தண்டவாளத்தில் புறநகர் மின்சார ரயில் வேகமாக வந்துள்ளது. அந்த ரயில், கண் இமைக்கும் நேரத்தில் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் மீது பலமாக மோதியுள்ளது. இதில், 2 ரயில்களிலும் உள்ள இஞ்சின் பலமாகச் சேதமடைந்தது. மேலும், 2 ரயில்களும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதில், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசரமாக அனுமதித்தனர்.
இதனிடையே, ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான வீடியோ, தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பாரத்தில் நின்று செல்வதற்காக மெதுவாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, அதே தண்டவாளத்தில் புறநகர் மின்சார ரயில் வேகமாக வருகிறது. இதில், 2 ரயில்களும் நேருக்கு நேர் மோதிய வேகத்தில், 2 ரயில்களும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்குகிறது.
குறிப்பாக, புறநகர் மின்சார ரயிலின் 4 மற்றும் 5 பெட்டிகள் மோதிய வேகத்தில் மேலே அந்தரத்தில் பறப்பதுபோல், அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் தூக்கி வீசப்படுகிறது. இதனையடுத்து, தூக்கி வீசப்பட்ட ரயில் பெட்டியிலிருந்து பயணிகள் நாலா புறமும் அலறி அடித்துக்கொண்டு சிதறி ஓடினர்.
இதில், பல பயணிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் ரயில் வருகிறதா இல்லையா என்று பார்க்காமல், அந்த தண்டவாளத்தைக் கடந்து ஓடிக்கொண்டு இருக்கின்றனர். நல்ல வேலையாக, அருகில் உள்ள எந்த தண்டவாளத்திலும், அந்த நேரத்தில் ரயில்கள் எதுவும் வரவில்லை. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
The Hyderabad train accident as it happened. Thankfully it was not that bad pic.twitter.com/plnJsQygc0
— Naveen S Garewal (@naveengarewal) November 12, 2019
முக்கியமாக, ரயில் நிலைய பிளாட்பாரத்தை கடந்து சென்றதால், புறநகர் மின்சார ரயில் மெதுவாகச் சென்றுள்ளது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுவே ரயில் நிலையம் இல்லாத மற்ற புறநகர்ப் பகுதியாக இருந்திருந்தால், 2 ரயில்களும் வேகமாகச் செல்ல நேரிட்டிருக்கும். அப்படி நிகழ்ந்திருந்தால், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய உயர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது தொடர்பாக தற்போது வெளியாகி உள்ள வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.