ஊரெங்கும் கொரோனா பீதியால், சென்னையின் முக்கியமான சாலைகள், சுற்றுலா தளங்கள், வழிபாட்டுத் தளங்கள், மால்கள், திரையரங்கங்கள் என பல்வேறு இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கி, அதன்பிறகு சிகிச்சை மேற்கொள்வதைக் காட்டிலும், கொரோனா வைரஸ் வராமல் தடுப்பது எப்படி? என்ன செய்ய வேண்டும்? என்றும் தற்போது பார்க்கலாம்...
- சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் உடனே அருகில் உள்ள மறுத்தவர்களை அணுக வேண்டும்.
- சோப்பு மற்றும் கிருமி நாசினி பயன்படுத்தி அடிக்கடி கை மற்றும் முகத்தைக் கழுவ வேண்டும்.
- ஒவ்வொரு முறையும் கை கழுவக் குறைந்தபட்சம் சுமார் 20 நொடிகளாவது செலவிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- கை விரலின் நகம் மற்றும் இடுக்குகளில் கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
- கழுவாத கை கொண்டு கண், மூக்கு, வாய் ஆகியவற்றைத் தொடக் கூடாது.
- தும்மல் மற்றும் இருமலால் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதால், மற்றவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
- தும்மல் மற்றும் இருமலால் ஏற்படும்போது, அனைவரும் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது அனைவருக்கும் நலம் பயக்கும்.
- குடிநீர் கேன் மற்றும் சாப்பாடு தட்டு மற்றும் பிறருக்கு உணவு ஊட்டி விடுதல், ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
- கொரோனா வைரஸ் 100 பேரில் 80 பேருக்கு, தானாகவே சரியாகிவிடும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். மற்ற 20 பேருக்குத் தான் சிகிச்சை அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
- குறிப்பாக, மற்றவர்களிடம் கை குலுக்குவதையும், மற்றவர்களைத் தொட்டுப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.
- சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள் மற்றும் தோழிகள் என யாரும் மற்றவர்களின் ஆடைகளைக் கூட அணிய வேண்டாம்.
- மற்றவர்கள் பயன்படுத்தும் சீப்பு உள்ளிட்ட உடல் சார்ந்து பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் யாரும் பயன்படுத்த வேண்டாம்.
- தேவையற்ற மற்றும் அவசியமற்ற பயணத்தைத் தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது.
- வீட்டுக்கு விருந்தினர்களை அழைப்பதையோ, விருந்தினராகச் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.
- விழாக்கள், நிகழ்வுகளுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- உணவகங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
விழிப்புடன் இருப்போம், கொரோனா வராமல் தடுப்போம்!