“கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் முதலில் என்னென்ன செய்ய வேண்டும்” என்று, சுகாதார துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா 3 அலை பரவத் தொடங்கி உள்ளன. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனாலும், உலகின் பல நாடுகளிலும் பரவி வரும் ஒமைக்ரான் தொற்று இந்தியாவிலும் சற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளன. அந்த வகையில், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பின் எண்ணிக்கையானது தற்போது 2 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
அதன்படி, தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பின் எண்ணிக்கையானது தற்போது 130 ஐ கடந்து உள்ளது.
இதனால், “கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பை தவிர்க்கும் விதமாக, பொது மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக அதிலிருந்து தன்னைத் தானே தற்காத்து கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? என்றும், யாரெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டும்” என்றும், சுகாதாரத்துறை ஒரு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது.
இது குறித்து சுகாதார துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில்,
- தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில், மிதமான அறிகுறி, பாதிப்பு உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- மருத்துவர்களின் பரிந்துரைப்படி, பாராசிட்டமால், போலிக் ஆசிட் மாத்திரை, 10 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.
- படுக்கையில், குப்புறப்படுத்து கொள்வதும், அதிக தண்ணீர் அருந்தும் அவசியம் என்றும், நோய் தொற்று உள்ளவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- ரத்த ஆக்சிஜன் அளவை பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கொண்டு, ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ரத்த ஆக்சிஜன் அளவு பரிசோதனையில், ரத்த ஆக்சிஜன் அளவு 92 ஆக இருப்பதை நோய் தொற்று உள்ளவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- கொரோனா தடுப்பூசி செலுத்தாத, இணை நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு தெரிய வந்தால் அவர்கள் உடனடியாக கண்காணிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய மிக அவசியம் என்றும், தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது.
- தடுப்பூசி செலுத்தி விட்டு, இணை நோய் எதுவும் இல்லாதவர், தங்கள் வீடுகளிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்றும், ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
- வீடுகளில் தனிமைப்படுத்துவோர் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி நடந்து, சரியான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு, கண்டிப்பாக ஓய்வில் இருப்பது மிக மிகவும் அவசியம் என்றும், வலியுறுத்தப்பட்டு உள்ளது.
- கொரோனா அறிகுறி வந்து தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், ஆக்சிஜன் தேவைப்படுவோர், இணை நோய் உள்ளவர்கள், பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், 60 வயதுக்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களை சார்ந்தவர்கள் என அவர்கள் அனைவரும் கட்டாயம் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ள வேண்டும்” என்றும், சுகாதார துறை தனது புதிய அறிவிப்பில் வலியுறுத்தி உள்ளது.