அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21 ஆம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்று, தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், தற்போது தலைமை செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான சிறப்புக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை ஒரு மாதத்தில் தமிழக அரசிடம் வழங்க உள்ளது.
மேலும், முடிதிருத்துவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு 2 தவணைகளாக ரூ.2,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பொது
முடக்கத்தால் 2 மாதமாக சலூன் கடைகள் மூடியுள்ளதால் தமிழக அரசு சார்பில் ரூ.2,000 வழங்கப்படும் என்றும், முதலமைச்சர் கூறியுள்ளார்.
அதேபோல், வெளியூரில் உள்ள 10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் 3 நாளுக்கு முன்பே அழைத்து வந்து, தனியார் பள்ளி விடுதியில் தங்க வைக்கப்படுவர் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தேர்வு மையம் வருவதற்கு இ-பாஸ் பெற கடிதம் அனுப்பப்படும் என்றும், ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்றும், அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இபாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21 ஆம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
கிராமப்புற தொழிலாளர்கள் வி.ஏ.ஓ.விடமும், பேருராட்சி பகுதிகளில் நிர்வாக அலுவலர்களிடமும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மண்டல அலுவலர்களிடமும் மனு வழங்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், நாட்டு மக்களுக்கு தற்போது பணம் தான் தேவை என்பதால், நேரடியாக அவர்களுக்குப் பணம் கிடைக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி திட்டத்தைப் பிரதமர் மோடி மாற்ற வேண்டும் என்று, ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். அத்துடன் ஏழைகள், விவசாயிகள் தான் நாட்டின் எதிர்காலம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றும், ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல், கொரோனா நடவடிக்கையில் அரசிடம் ஒருங்கிணைப்பு வெளிப்படையில்லை. நோய் அறிகுறி சோதனைகளை அரசு சரிவர செய்யவில்லை. ஊரடங்கில் குளறுபடி நடந்துள்ளது என்று, திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.