திமுக அரசின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் புவனகிரி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், மழையால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: திமுக அரசின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. மேலும் கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் அனைத்துமே செய்துள்ளோம். பத்து நாளோ பத்து மாதமோ மக்கள் பாதிக்காமல் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனைதொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக இணைஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்கவில்லை.