ஒரு தனியார் தொலைக்காட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்குச் செழுமையான ஆட்சியைத் தருவேன் என்று கூறியுள்ளார்.
’அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம்’ என்ற தலைப்பில் இந்தியா டூடே நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
மழை நீர் சேமிப்பு போன்ற நீர் மேலாண்மை திட்டங்களால் தமிழகம் பெரிய அளவில் பயனடைந்து உள்ளது. இதனால் நீர் தேவைக்கு அண்டை மாநிலத்தை எதிர்பார்த்து நின்ற நிலைமை மாறி இருக்கிறது. மேலும் அதிமுகவின் பல வளர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு விருது கிடைத்துள்ளது.
தமிழக மக்கள், நாடாளுமன்றத் தேர்தல் சட்டசபைத் தேர்தல் என்று பிரித்துப் பார்த்து வாக்களிக்கிறார்கள். பாஜகவுக்கு அதிமுக தலைமை அமைத்துக் கொடுக்கிறது என்ற குற்றசாட்டுல உண்மை இல்லை. மத்திய அரசோடு தமிழக அரசு இணக்கமா மட்டுமே செயல்பட்டு வருகிறோம்.
நாட்டிலே அமைதி பூங்கா தமிழகம் இருக்கும். இதனால் வரும் தேர்தலிலும் அதிமுக தான் ஆட்சி அமைக்க வேண்டும் எனத் தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அமமுக - அதிமுக இணைவது என்பது நடைபெறாது. போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமா சென்னையை மாற்றுவேன். அனைத்து தரப்பு மக்களின் நிலைமையும் பிரச்சனைகளும் எனக்குப் புரியும். அனைத்து தரப்பு மக்களுக்காகத் தான் அதிமுக என்றும் இருந்துவந்துள்ளது.
இனியும் அவ்வாறே தொடரும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தி செயல்பட்டனால அதிமுகவுக்கு மக்களிடத்தில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகள் முதலமைச்சரா இருந்தனால வரும் தேர்தலில் வென்று தமிழகத்துக்குச் செழுமையான ஆட்சியைத் தருவேன் ” என்றுள்ளார்.