கனடா துப்பாக்கி சூடு சம்பவத்தில், பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்த பெண் போலீசுக்கு அந்நாட்டு மக்கள் ரியல் ஹீரோ என்று புகழாரம் சூட்டி உள்ளனர்.
கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா நகரில், 51 வயதான கேப்ரியல் வார்ட்மேன் என்பவர், போலீஸ் போல் உடையணிந்து காரில் சுற்றித் திரிந்து, பலரது வீடுகளிலும் அதிரடியாகத் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, அப்பகுதி மக்கள் கனடா போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். ஆனால், பதிலுக்கு கேப்ரியல் வார்ட்மேன், போலீசாரையும் எதிர்த்து சுடுத் தொடங்கினான்.
இதில், 23 வயதான பெண் போலீஸ் ஹெய்தி ஸ்டீவன்சன் உள்பட மொத்தம் 13 பேர், பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தனர்.
பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில்; தாக்குதல் நடத்தியவரை எதிர்த்து, 23 வயதான பெண் போலீஸ் ஹெய்தி, கடுமையாகப் போராடி உள்ளார். இதில், பரிதாபமாக ஹெய்டி சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 2 குழந்தைகளுக்கு தாயான ஹெய்டியின் உயிரிழப்பு, அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய கேப்ரியல் வார்ட்மேன் என்பவரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 லிருந்து, தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் பலரின் உயிரைக் காப்பாற்ற, தனது உயிரைத் தியாகம் செய்த அந்த பெண் போலீசை, கனடாவின் ரியல் ஹீரோ என்று, அந்நாட்டு மக்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் புகழாரம் சூட்டி வருகின்றனர்.