பில்லி, சூனியம், ஏவல் எடுப்பவர் “பேய் ஓட்டுவதாக” கூறி, அடுத்தவரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள பெண்ணாடம் என்னும் ஊரில், பள்ளிவாசல் சென்று செயல்பட்டு வருகிறது.
அந்த பள்ளிவாசலில் 54 வயதான அப்துல்கனி என்ற நபர், அங்கிருந்தபடியே “பில்லி, சூனியம், ஏவல்” போன்றவற்றை எடுப்பதாகவும், இவற்றுடன் பேய் பிடித்தவர்களுக்கு பேய் ஓட்டும் போவதாகவும்” கூறி, அந்த பள்ளிவாசலில் பல வருடமாக செயல்பட்டு வந்திருக்கிறார்.
இந்த சூழலில் தான், திட்டக்குடியில் இருந்து சக்திவேல் என்பவரின் மனைவி சின்ன பொண்ணு என்ற இளம் பெண், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்ததுடன், சுயநினைவு இல்லாமல் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால், கடந்த 20 ஆம் தேதி அன்று, அவருடைய கணவர் தன் மனைவியை பேச கைக்க முயன்றும், அவர் எதுவும் பேசாமல் இருந்த நிலையில், வேறு வழி தெரியாமல், பெண்ணாடத்தில் உள்ள பள்ளிவாசலில் இருக்கும் அப்துல் ஹனியிடம், அவர் அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கு சென்றதும், “பேய் ஓட்டுவதாக” கூறி, அந்த திருமணம் ஆன இளம் பெண்ணை உள்ளே அனுப்பி, மற்றவர்களை வெளியே நிற்க வைத்து, அவர் கதவை பூட்டிக்கொண்டு அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், சத்தம் போட்டு கத்தியிருக்கிறார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வெளியே நின்றிருந்த அவரது கணவன் சக்திவேல், சற்று சந்தேப்பட்டு அங்குள்ள ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்து உள்ளார்.
அப்போது, 54 வயதான அப்துல்கனி, தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுக்கொண்டு இருந்த நிலையில், அவரது மனைவி சத்தம் போட்டு கத்திக்கொண்டு, அவரிடமிருந்து போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
இதனைப் பார்த்து, வெளியே நின்றபடியே பதறி துடித்த அவரது கணவன், தன்னுடன் வந்திருந்த மற்ற உறவினர்கள் உதவியுடன், தனது மனைவியை மீட்டு உள்ளார்.
அத்துடன், அங்கிருந்து தனது மனைவியை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையம் சென்ற அவர், அங்கு புகார் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்திய நிலையில், அப்துல் கனி அந்த பெண்ணிடம் தவறாக உறுதி செய்யப்பட்டது.
இதனைடுத்து, போலீசார் அதிரடியாக அந்த நபரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால், இந்த விசாரணையின் போது, அப்துல்கனி திடீரென்று அங்கிருந்த்து தப்பித்து ஓடிய நிலையில், தற்போது தலைமறைவாகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால், அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.