இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,46,192 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,187 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மிக அதிகளவாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,695 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 50,667 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 15,786 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் பட்டியலில் 2 வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 17,082 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ள குஜராத்தில் இதுவரை 14,468 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை கொரோனாவுக்க 888 பேர் உயிரிழந்துள்ளனர்.
4 ஆம் இடத்தில் உள்ள தலைநகர் டெல்லியில், டெல்லியில் புதிதாக 412 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்த கொரோனா பாதிப்ப எண்ணிக்கை 14,465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்துள்ளனர்.
டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்த 4 பேர் தமிழ்நாடு இ-பாஸ் பெறாததால் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,282 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44 பேர் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டு இருந்த உள்நாட்டு விமான சேவை இன்று முதல் செயல்படத் தொடங்கி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 146 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,845 லிருந்து 1,46,192 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,021 லிருந்து 4,187 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 57,721 லிருந்து 60,491 ஆக உயர்ந்துள்ளது.