தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், “தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறை படுத்தப்படும்” என்கிற தகவலும் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய வைரசானது, முதல் அலையை கடந்து 2 வது அலையும் வந்து, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் 3 வது அலையும் கடந்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ், மெல்ல இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல மீண்டும் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கையானது, கடந்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் உயர தொடங்கியது.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் கொரோனாவுக்கு தமிழகத்தில் மீண்டும் ஒரு உயிர் பலியும் ஏற்பட்டது. இந்த கொரோனா பலியால், தஞ்சை மக்களே கடும் பீதியில் உரைந்து போனார்கள்.
அதாவது, கடந்த மாதம் தொடக்கத்தில் தமிழகத்தில் நாளோன்றுக்கு சுமார் 25 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே இந்த தொற்று எண்ணிக்கையானது மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது அதன் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதனையடுத்து, கொரோனா தொற்று நாடு முழுவதும் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலர் கடந்த மாதம் கடிதம் எழுதி முன்எச்சரிக்கையும் செய்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்றை சென்னையில் 909 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 352 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 100 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 71 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இப்படியாக, நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 2,069 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், உயிரிழப்புகள் மட்டும் இது வரை ஏற்படவில்லை என்றும், கூறப்படுகிறது.
அதே போல், இந்தியா முழுவதும் கொரோனாவால் 17,070 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 23 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 14,413 பேர் குணமடைந்து உள்ள நிலையில், கொரோனாவுக்கு 1.07 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தான், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதன் படி, சென்னை தாலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு துறை டாக்டர்கள், முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் மட்டும் இது வரை ஏற்படவில்லை என்றும், இதனால் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதன்படி, இந்த ஆலோசனை கூட்டத்தில் “முகக்கவசம் கட்டாயம்” என்று, ஆலோசித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது “இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து” அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, “தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்” என்று, பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.