கொரோனா வைரஸ்.. காதல் வைரசாக மாறியதால் இந்தியாவில் ஆணுறை விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால். அனைத்து தரப்பினரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதனிடையே, ஐ.டி துறை உள்ளிட்ட பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தே ஒர்க் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் உதவியுடன் பணியாற்றி வருகிறார்கள். இதனால், வீட்டில் இருக்கும் தம்பதிகள் இடையே காதல் ரொமன்ஸ் அதிகரித்து, நெருக்கமும் அதிகரித்துள்ளது.
அதன் காரணமாக, வெளியே பரவும் கொரோனா வைரஸ், வீட்டிற்குள் காதல் வைரசாகப் பரவி வருகிறது. அத்துடன், தம்பதிகள் இருவரும் நேரடியாகத் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதால், ஆணுறைகளைப் பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், திறந்திருக்கும் மருந்தகம் மற்றும் ஆன்லைனில் மாஸ்க் விற்பனைக்கு இணையாக ஆணுறையும் விற்கப்பட்டு வருகிறது.
அதேபோல், விட்டமின்-சி மாத்திரைக்கு இணையாக, கருத்தடை மாத்திரையின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக மருந்துக் கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.