சென்னை உள்பட 5 மாநகரங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், என்னென்ன கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்...
- முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- முழு ஊரடங்கு காலத்தில் ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட 5 மாநகராட்சிகள் தவிரப் பிற இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் தொடரும்.
- இக்காலத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் (Containment Zones) கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
- நோய்த்தடுப்பு பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படும்.
- மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதியில்லை.
- மேற்கண்ட பணிகள் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது.
- இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது.
- முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
- தொலைப்பேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் உணவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
- மருத்துவமனைகள், மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- வங்கி சேவைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் மட்டும் உரிய அனுமதி பெற்று செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- காய்கறி, பழங்களை விற்க நடமாடும் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர்களுக்கு உதவுபவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் அரசின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.
- மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது.
- மேற்கண்ட மாநகராட்சிகளைத் தவிரப் பிற பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் அப்படியே தொடரும்.