திருமணமான பெண்ணிடம் ஹவுஸ் ஓனர் முத்தம் கேட்டதால், பதறிப்போன பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஜெயக்குமார், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், தனக்கு சொந்தமான வீட்டை
30 வயதான ஆட்டோ ஓட்டுநர் செல்வகுமார் என்பவருக்கு வாடைக்கு விட்டு உள்ளார்.

30 வயதான ஆட்டோ ஓட்டுநர் செல்வகுமார், தனது மனைவியுடன் இந்த பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார். செல்வகுமாருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இப்படியான நிலையில், செல்வகுமார் ஆட்டோ ஓட்டச் சென்ற பிறகு, அடிக்கடி வீட்டிற்கு வரும் அந்த வீட்டின் உரிமையாளரான 50 வயதான ஜெயக்குமார், செல்வகுமாரின் மனைவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தனது கணவன் செல்வகுமார் மாலையில் வீடு திரும்பியதும், பாதிக்கப்பட்ட அவர் மனைவி புகார் கூறி உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த செல்வகுமார், வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமாரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியான சூழலில், செல்வகுமார் வழக்கம் போல் இன்றும் ஆட்டோ ஓட்ட சென்று உள்ளார்.

அப்போது, வீட்டிலிருந்த செல்வகுமாரின் மனைவியிடம் வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார் சென்று, “எனக்கு முத்தம் கொடுங்க” என்று, கேட்டதாகத் தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அப்படியே திடுக்கிட்டு நின்று உள்ளார்.

அத்துடன், வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார், அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனால், வேறு வழியின்றி ஜெயக்குமார் அங்கிருந்து சென்று உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண் தனது கணவர் செல்வகுமாருக்கு போன் செய்து, நடந்த இந்த பாலியல் அத்து மீறில் குறித்துக் கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த கணவன் செல்வகுமார், இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெயக்குமாரை அதிரடியாகக் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில், தனது வீட்டில் வாடைக்கு இருக்கும் பெண்ணிடம் அவர் தவறாக நடக்க முயன்றது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஜெயக்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.