கோயிலில் பெண்னை அவதூறாக பேசிய 20 தீட்சிதர்கள் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகித்து தொடர்ந்து பூஜை செய்து வருகின்றனர்.

இந்த சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கடந்த 13 ஆம் தேதி அன்று, சிதம்பரத்தில் உள்ள பழைய புவனகிரி சாலை பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்கிற 36 வயதான ஜெயஷீலா என்ற பெண், சாமி கும்பிட சென்று உள்ளார்.

அப்போது, நடராஜர் கோயிலுக்குள் உள்ள ஜெயஷீலா சிற்றம்பல மேடையில் ஏறி 36 வயதான ஜெயஷீலா என்ற பெண், சாமியை தரிசிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அந்த கோயிலில் இருந்த தீட்சிதர்கள் சிலர், ஜெயஷீலாவை ஆபாசமாக திட்டியதுடன், அவரை சாமியை தரிசனம் செய்யவிடாமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, அந்த பெண்ணை அந்த கோயிலில் இருந்த பல தட்சிதர்கள் சூழ்ந்துக்கொண்டு, விரட்டிக்கொண்டே சென்றது தொடர்பான வீடியோ ஒன்றும் நேற்றைய தினம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை, அந்த கோயிலில் இருந்த தீட்சிதர்கள் சிலர் ஒன்று திரண்டு, அந்த பெண்ணை துரத்தி துரத்தி விரட்டி அடித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஜெயசீலா என்ற பெண், சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரில், “தாழ்த்தப்பட்ட பெண்ணான என்னை, கோயில் தீட்சிதர்கள் ஆபாசமாகத் திட்டியதுடன், சாமி தரிசனம் செய்யவிடாமல் என்னை திருப்பி அனுப்பியதாகவும்” தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், “பெண் பத்தரை அவதூறாக பேசியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பத்தில் தொடர்புடைய கோயிலின் 20 தீட்சிதர்கள் மீதும் வழங்குப் பதிவு” செய்து, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், தீட்சிதர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். இதனால், சிதம்பர் நடராஜர் கோயில் சம்பவம், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.