மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மர்ம நர்பகள் போலீசாருக்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். போலீசார், மறுமுனையில் பேசுவதற்கு முன்பே, எதிர்முனையில் பேசியவர், தொலைப்பேசியை வைத்துவிட்டதால், மேற்கொண்டு எந்த தகவலையும், போலீசாரால் பெற முடியவில்லை.
இதனையடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன், மீனாட்சி அம்மன் கோவிலின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் உள்ள சில கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் பலரும், தொடக்கத்தில் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கோயிலுக்குள் வரும் பக்தர்கள் போலீசாரின் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, கோயிலுக்கு முன்பாக, தடுப்பு போடப்பட்டுப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசாரும் அதிக அளவில் கோயில் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் கணிசாகமா குறைந்துள்ளது.
இதனிடையே, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள தகவல் மதுரை முழுக்க பரவியதால் அங்குப் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது.