மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை.
மத்திய அரசுக்கு எதிராக தொழிற் சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 30-ம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையொட்டி இரயில், பேருந்து மற்றும் ஆட்டோ சேவைகள் குறைந்திருப்பதால், இதனை பயன்படுத்தி இரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளிடமிருந்து அதிக பணம் வசூலிக்க கூடாது எனவும், அவ்வாறு வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து, மத்திய மற்றும் மாநில அரசு தொழிற்சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் 28.03.2022 மற்றும் 29.03.2022 ஆகிய 2 நாட்கள் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து, வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. அதன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்வ் உத்தரவின் பேரில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நிறுத்தத்தையொட்டி,சென்னையில் இரயில் பேருந்து, ஆட்டே உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் குறைந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதிக்கவுள்ளாகினர்.
அதனைத்தொடர்ந்து இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, ஆட்டோ லோர் ஆட்டோ ஆகியவை பொதுமக்களிடம் அதிக பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்ததையொட்டி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில் குமார் சி. சராட்கர், தலைமையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சென்னையிலுள்ள, சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட இரயில் நிலையங்கள், கோயம்பேடு மற்றும் இதர பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கு நேரில் சென்று அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் வேலை நிறுத்தத்தையொட்டி போக்குவரத்து சேவைகள் குறைத்துள்ளதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் மீறுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அதிக கட்டணம் வசூலித்ததாக பொதுமக்கள் கொடுத்த புகார்களின் பேரில், சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.ஆகவே. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ. ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்து பொதுமக்கள் காவல் அவசர எண்.100 மற்றும் போக்குவரத்து அவசர உதவி எண்.103 போக்குவரத்து காவல் வாட்சப் எண் 9003130103 மற்றும் சென்னை பெருநகர காவல். சமூக வலைதளங்களில் புகார்கள் கொடுக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.