கோவையில் செல்போன் டவரையே காணோம் என்று ஏர்செல் நிறுவன அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
படத்தில் வரும் காட்சியை போலவே, கிணத்தை காணோம் என்று சினிமாவில் வடிவேலு செய்த காமெடியை போல் செல்போன் டவரையே காணோம் என்று ஏர்செல் நிறுவன அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் சந்தேகத்தில் செல்போன் டவரா? இல்லை, செல்போன் டவரில் உள்ள பேட்டரியா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்த அதிகாரி, செல்போன் டவரை காணோம் என்று புகார் அளித்துள்ளார். 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த செல்போன் டவர் காணாமல் போனதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதாவது கோவை மாவட்டத்தில் வேலாண்டிபாளையம் தடாகம் சாலையில் கோனார் வீதியில் ஏர்செல் நிறுவன செல்போன் டவர் இருந்துள்ளது . அந்தத் அவரையும் அவற்றுடன் இருந்த உதிரி பாகங்களையும் காணவில்லை என்று ஜி.டி.எல்., இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவன அதிகாரி அர்ஜுனன், சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த புகாரை படித்துப் பார்த்த போலீசாருக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இது என்ன வடிவேலுவின் கிணத்தை காணோம் காமெடி மாதிரியே இருக்கிறது என்று சொல்லிவிட்டு, உண்மையிலேயே செல்போன் டவரைத் தான் காணோமா? இல்லை அதிலிருந்து பேட்டரியை காணோமா? என்று திரும்பத் திரும்பக் கேட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு ஏர்செல் நிறுவன அதிகாரி, இல்லை உண்மையிலேயே செல்போன் டவரை காணோம் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து கடைசியாக சோதனைக்கு வந்தபோது டவர் அதே இடத்தில் தான் இருந்தது. அதன் பின்னர் சில நாட்களில் தான் யாரோ களவாடிச் சென்று இருக்கிறார்கள். அந்த செல்போன் டவர் மதிப்பு 30 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் என்று சொல்லியிருக்கிறார்.
மேலும் இந்த திருட்டு கடந்த ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தான் இத்திருட்டு நடந்திருப்பதாகவும் அந்த அதிகாரி புகாரில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த புகாரை பெற்றுக் கொண்ட சாய்பாபா காலனி போலீசார் செல்போன் டவரை திருடியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.