பள்ளி மதிய உணவுப் பாத்திரத்தில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வராம்பூர் அடாரி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், இன்று காலை பள்ளி தொடங்கிய உடன், குழந்தைகளுக்கு மதியம் உணவு தயாரிக்கப்பட்டு வந்தன.
அப்போது, பள்ளியின் சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்த சமையால் காரர், காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு, பாடல் கேட்டுக்கொண்டே சமைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அந்த சமையல் அறைக்குள் வந்த 3 வயது குந்தை ஒன்று, திறந்திருந்த சாம்பார் அண்டாவை எட்டிப் பார்த்துள்ளது. ஆனால், குழந்தைக்கு அது எட்டவில்லை. அதனால், எக்கி எக்கி அந்த அண்டாவைப் பார்த்துள்ளது. இதில், நிலை தடுமாறிய அந்த குழந்தை சாம்பார் அண்டாவில் அப்படியே விழுந்துள்ளது.
இந்த நேரத்தில் சாம்பார் கொதிக்கக் கொதிக்க சூடாக இருந்ததால், விழுந்த கொஞ்ச நேரத்தில் அலறி துடித்த குழந்தை, அப்படியே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்கும் வகையில், பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சாம்பார் அண்டாவில் விழுந்து உயிரிழந்த குழந்தை, அந்த பள்ளியில் படிக்கவில்லை என்றும், அந்த குழந்தையின் வீடு, பள்ளி அருகிலேயே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் பள்ளியின் மதிய உணவுப் பாத்திரத்தில், 3 வயதுக் குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.